பொதுவாக சிங்கங்கள் அதிகபட்சம் 13 ஆண்டுகள் வரை உயிர்வாழக் கூடியவை.ஆனால் லூங்கிடோ என்கிற கென்யாவில் இருந்த சிங்கம் கிட்டதட்ட 19 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து வந்தது. லூங்கிடோ உலகின் மிக வயதான சிங்கமாக கருதப்பட்டு வந்தது. ஆனால் கடந்த மே 10 ஆம் தேதி இந்த சிங்கம் இறந்துவிட்டது என்று லயன் கார்டியன்ஸ் என்கிற கென்யாவைச் சேர்ந்த அமைப்பு  அறிவித்தது.


வயதான சிங்கம் கொலை:


அம்போசெலி தேசியப் பூங்கா தென் கென்யாவில் அமைந்துள்ளது. இந்த தேசிய பூங்காவை ஒட்டி அமைந்துள்ள கிராமம் ஒல்கெலுன்யீட் (olkelunyiet).கடந்த சில காலமாகவே இந்த பூங்காவில் இருந்த சிங்கங்கள் உணவு தேடி கிராமத்திற்கு வந்து செல்வது அதிகரித்துள்ளது. கிராமத்தாரின் கால்நடைகள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வந்திருக்கின்றன. இதனால் கோபமடைந்த கிராமத்தினர் லூங்கிடோவை கொல்ல முடிவுசெய்தததாக கூறப்படுகிறது. கடந்த மே பத்தாம் தேதி உலகத்தின் மிக வயதான ஆண் சிங்கம் என்று கருதப்பட்ட லூங்கிடோ கடும் போராட்டங்களுக்குப் பிறகு மேய்ச்சல்காரகளால் கொல்லப் பட்டது.


இந்த தகவலை கென்யாவைச் சேந்த லையன் கார்டியன் என்கிற அமைப்பு தெரியப்படுத்தியது. இந்த அமைப்பு ஆஃப்ரிக்காவில் இருக்கும் சிங்களை பராமரித்து வரும் ஒரு அமைப்பாகும். இந்த நிகழ்வு குறித்து மேலும் தெரிவிக்கையில் ” கோடைகாலம் வந்தாலே இங்கிருக்கும் உயிரினங்களுக்கு கடும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படுகிறது.இதன் காரணத்தை வேறு வழியில்லாமல் சிங்கள் இரைதேடி கிராமங்களுக்குள் வந்து மக்களின் கால் நடைகளை வேட்டையாடுகின்றன. இதனால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையில் மோதல் நிகழ்கிறது. லூங்கிடோவை கொல்வது அதனை கொன்ற மனிதர்களுக்கு அவவளவு எளிதானதாக இருக்கவில்லை. இந்த சிங்கத்தை அவர்கள் மனிதர்கள் விலங்குகள் சேர்ந்து வாழ்வதற்கான சின்னமாக கருதினார்கள். ஆனால் அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.


இந்த நிகழ்வு தன்னை மிகவும் வருத்தப்பட செய்ததாகவும் அழிந்து வரும் சிங்கங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை கென்யா அரசு எடுக்கவேண்டும் என்று தெரிவித்தார் பாவ்லா கஹும்பு என்கிற விலங்குகள் பாதுகாவலர். மேலும் மனிதர்கள் விலங்குகளுக்கு  இடையிலான தொடர்மோதல்களை தடுப்பது குறித்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.


கடும் வறட்சி  மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணத்தால் விலங்குகள் உணவின்றி மனித எல்லைகளுக்குள் நுழைகின்றன. அவற்றின் நோக்கம் மனிதர்களுக்கு இடையூறு தருவது இல்லையென்றாலும் வேறு வழியின்றி அவை இந்த  நிலைக்கு தள்ளப்படுகின்றன. இதனால் பாதிப்படைந்த மனிதர்கள் அந்த முதிய விலங்கை கொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள். உலகத்தின் அதிக வயதுடைய சிங்கம் என்று கருதப்பட்ட இந்த விலங்கின் இறப்பிற்கு யார்  காரணம்? தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாக்க மனிதர்கள் இதை செய்திருந்தாலும் இறந்த அந்த விலங்கிற்கான நீதி என்ன? என்ற கேள்வியை சமூக மற்றும் விலங்கின ஆர்வலர்கள் எழுப்பி வருகின்றனர்.