Fort Knox: 42 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான ஃபோர்ட் நாக்ஸ் பெட்டகத்திற்காக, அமெரிக்கா 1 லட்சம் ஏக்கர் பரப்பளவை தீவிரமாக கண்காணித்து வருகிறது.
ஃபோர்ட் நாக்ஸ் பெட்டகம்:
உலகில் பலத்த பாதுகாப்பை கொண்ட பல கட்டிடங்கள் உள்ளன உள்ளன. அங்கு கண்ணும் கருத்துமாக இருந்தும் சில விதி மீறல்கள் நிகழதான் செய்கின்றன. அப்படி இருக்கையில் சாதாரண நபர்கள் கனவில் கூட நுழைய முடியாத ஒரு இடம் அமெரிக்காவில் உள்ளது. அதன் பெயர் நாக்ஸ் கோட்டை. கென்டக்கியில் அமைந்துள்ள ஃபோர்ட் நாக்ஸ், அமெரிக்காவின் மிகச் சிறந்த மற்றும் அதிக வலுவூட்டப்பட்ட தங்க சேமிப்பு பெட்டகமாகும். 1936 இல் நிறுவப்பட்ட இந்த கோட்டை இணையற்ற பாதுகாப்பிற்கு ஒத்ததாக உள்ளது. அமெரிக்காவின் தங்க கையிருப்பில் குறிப்பிடத்தக்க பங்கு இங்கு வைக்கப்பட்டுள்ளது. பல தசாப்தங்களாக, நாக்ஸ் கோட்டை வலுவான பாதுகாப்புடன் ஊடுருவ முடியாத ஒரு சின்னமாக உள்ளது, அசாதாரண பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள தங்கதம் இங்கு பாதுகாக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த கோட்டை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஃபோர்ட் நாக்ஸ் பாதுகாப்பு விவரங்கள்:
- ஃபோர்ட் நாக்ஸ், யுனைடெட் ஸ்டேட்ஸ் புல்லியன் டெபாசிட்டரி, சுமார் 1,09,000 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பாதுகாப்பான பகுதியை ஆக்கிரமித்துள்ளது. அந்த கோட்டையானது ஒப்பீட்டளவில் சிறியது. குறிப்பாக அந்த பெட்டகம் சுமார் 42,000 சதுர அடி பரப்பளவ மட்டுமே கொண்டுள்ளது.
- ஃபோர்ட் நாக்ஸ் சுமார் 147 மில்லியன் அவுன்ஸ் (4,500 மெட்ரிக் டன்களுக்கு மேல்) தங்கத்தை சேமித்து வைத்துள்ளது. இது அமெரிக்க கருவூலத்தின் தங்க கையிருப்பில் கணிசமான பகுதி ஆகும். இதன் மதிப்பு $300 பில்லியன் (2024 விலையின்படி). இந்த கருவூலத்தில் 42 லட்சம் கிலோ தங்கம் இருப்பதாக சில மதிப்பீடுகள் கூறுகின்றன
- டெபாசிட்டரியானது 22-டன் அழுத்தத்தை தாங்கும் வகையிலான கதவுகளுடன் (வெடிகுண்டு தாக்குதல்), வலுவூட்டப்பட்ட எஃகு சுவர்கள் மற்றும் மேம்பட்ட மின்னணு அமைப்புகளால் பாதுகாக்கப்படுகிறது.
- பெட்டக கட்டிடம் ராணுவ வீரர்கள் மற்றும் கவச வாகனங்களால் சூழப்பட்டுள்ளது. அருகிலுள்ள ஃபோர்ட் நாக்ஸ் ராணுவத் தளம் கூடுதல் பாதுகாப்பைச் சேர்க்கிறது.
- ராணுவ தளத்தில் விமானம் தரையிறங்குவதற்கும் புறப்படுவதற்கும் தனி ஓடுபாதையும் உள்ளது.
- ஃபோர்ட் நாக்ஸிற்குள் மிகக் குறைவான நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அமெரிக்க அதிபருக்கே இங்கு செல்ல சிறப்பு அனுமதி தேவை என்று நம்பப்படுகிறது. இது அந்த பெட்டகத்திற்கு வழங்கப்படும் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.
- 1937 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் மந்தநிலையின் போது, அமெரிக்கா தனது வளர்ந்து வரும் தங்க இருப்புக்களுக்கு பாதுகாப்பான இடத்தை தேடியபோது, ஃபோர்ட் நாக்ஸ் செயல்படத் தொடங்கியது. இது தங்கத்தை மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போரின்போது அமெரிக்க அரசியலமைப்பு போன்ற மதிப்புமிக்க வரலாற்று ஆவணங்களையும் பாதுகாத்துள்ளது.
- ஃபோர்ட் நாக்ஸ் ஒரு சேமிப்பு வசதி மட்டுமல்ல, அமெரிக்க நிதி சக்தி மற்றும் உலகளாவிய ஆதிக்கத்தின் சின்னமாகும். அதன் இருப்பு அமெரிக்கர்களுக்கும் சர்வதேச சந்தைகளுக்கும் அதன் செல்வத்தைப் பாதுகாப்பதற்கான நாட்டின் திறனை உறுதிப்படுத்துகிறது
- ஃபோர்ட் நாக்ஸில் உள்ள தங்கம் அமெரிக்க பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஒரு பாதுகாப்பாக செயல்படுகிறது. அமெரிக்கா இனி தங்கத் தரத்தின் கீழ் செயல்படவில்லை என்றாலும், தீவிர நெருக்கடியின் போது டாலரை ஆதரிக்கக்கூடிய ஃபிசிகல் அசெட்டாக செயல்படுகிறது.