வியட்நாம் நாட்டில் மலை ரிசார்ட் ஒன்றில் சுமார் 150 அடிகள் உயரத்தில், கண்ணாடியால் செய்யப்பட்ட பாலம் ஒன்று திறக்கபப்ட்டுள்ளது. த்ரில் பயணங்களை விரும்பும் சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாலம், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இவ்வாறு உருவாக்கப்பட்டிருக்கும் மூன்றாவது பாலம் ஆகும். 


`பாச் லாங்’ சஸ்பென்ஷன் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் வியட்நாம் தலைநகர் ஹானோஸ், பக்கத்து நாடான லாவோஸ் ஆகியவற்றிற்கு இடையில் உள்ள சான் லா மாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் பெயரின் தமிழாக்கம், `வெள்ளை டிராகன்’ எனப்படுவதாகும். 


இங்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட 22 வயதாக வி தி து என்ற பெண், `நான் உயரமான இடங்கள் குறித்து அச்சப்படுபவள் என்பதால் கண்ணைத் திறக்காமல் நடந்து வந்தேன்’ எனக் கூறுகிறார். இவர் கடந்த மே 29 அன்று, இந்தப் பாலத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்டார். 



இந்தப் பாலத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள கண்ணாடிப் பேழை மூன்று படிமங்களைக் கொண்டது. ஒவ்வொரு படிமமும் சுமார் 40 மில்லிமீட்டர் தடிமனானதும், ஒரே நேரத்தில் சுமார் 450 பேர் வரை தாங்கக் கூடியதும் ஆகும். 


இரு பக்கங்களில் இருக்கும் சிகரங்களுக்கு இடையில் கட்டப்பட்டிருக்கும் இந்தப் பாலம் 290 மீட்டர்கள் நீளம் கொண்டவை. மேலும், மலைப்பக்கத்தில் இதற்காக 342 மீட்டர் பாதையும் கட்டப்பட்டுள்ளது. 






சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள கிங்யுவான் பகுதியில் அமைந்திருக்கும் 562 மீட்டர் நீளமுள்ள கண்ணாடிப் பாலத்தை உலகின் நீண்ட கண்ணாடி பாலம் என கின்னஸ் சாதனை புத்தகம் குறிப்பிட்டுள்ளது.



இந்நிலையில், வியட்நாமில் இந்தப் பாலம் திறக்கப்பட்ட போது, அதன் விழாவில் கலந்துகொண்ட கின்னஸ் உலக சாதனை நிறுவனத்தைச் சேர்ந்த கிளென் பொல்லார்ட், `ஒரு மலையின் ஓரத்தில் கட்டப்பட்டும், இயற்கையையும், பாறைகளையும் பாதிக்காமல் இந்தப் பாலம் உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது’ எனக் கூறியுள்ளார். 


வியட்நாம் போர் முடிவடைந்த 47வது ஆண்டு நினைவு ஆண்டை மையப்படுத்தி பாச் லாங் பாலம் திறக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் நான்கில் மூன்று பகுதி உயரத்திற்கு இந்தப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட இந்தப் பாலம், உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டிருந்ததால், தாமதாகத் திறக்கப்பட்டுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண