ரோனா என்கிற பெயரையே மறக்கும் அளவிற்கு நாம், அதனுடன் வாழ கற்றுக் கொண்டோம். ஆனால், கொரோனா , இங்கே அறிமுகமாகும் போது, அதை நாம் அணுகிய விதமும், அச்சம் அடைந்த தருணமும் என்றுமே மறக்க முடியாத ஒன்று. பெற்ற குழந்தையை கூட கூண்டுக்கு அந்தப்புறம் நின்று பார்க்கும் அவல நிலையில் நிறைய தாயும், தந்தையும் தள்ளப்பட்டனர். 


ஒரே குடும்பத்தில் பலர் தனிமையில் தங்கள் வாழ்வை பிரிந்து வாழும் நிலைக்கு தள்ளப்பட்டோம். அது தொடர்பான மீம்ஸ்கள் எல்லாம், அப்போது அதிக அளவில் பரவியது. அந்த அளவிற்கு கட்டுப்பாடுகளுக்குள் நம்மை கடத்தியது கொரோனா. அதனால், கொரோனாவை கொண்டாடியவர்களும் உண்டு. எந்த அளவிற்கு நமக்குள் சீரியஸ் தாக்கத்தை கொரோனா ஏற்படுத்தியதோ, அதே அளவிற்கு அதன் மீதான அச்ச உணர்வு மாறி, இன்று கொரோனாவை கொத்தமல்லி இலை போல பாவிக்கும் நிலை மாறியுள்ளது. 




சரி... இதெல்லாம் இந்தியாவில், ஆனால், உலக நாடுகள் பல இதோ போல தளர்வை அறிவித்து, மீண்டும் தீவிரம் அடைந்து வரும் கொரோனா காரணமாக, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதில் ஒன்று தான் இஸ்ரேல் நாடு. இஸ்ரேலுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது. அதில் தற்போது, கொரோனா பிரச்சனை பெரிய பிரச்சனையாக உள்ளது. கோவிட் பாதிப்பு ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகிறது. 


அவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள், வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு மீறி வெளியே வந்தால், பலத்த தண்டனை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், முதியவர் ஒருவர் கொரோனா விதிகளை மீறி, சிறைக்கு சென்றுள்ளார். வழக்கமாக இளைஞர்கள் தானே விதிகளை மீறுவார்கள் என்று நீங்கள் நினைக்கலாம்; உண்மை தான், ஆனால் அது நம்மூரில் தான். வெளிநாடுகளில் பெரும்பாலும், முதியவர்களின் சேஷ்டை தான் அதிகம் இருக்கும். 


மைக் பெலாக் என்ற 75 வயது முதியவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரை வீட்டுத்தனிமையில் இருக்க வலியுறுத்தியுள்ளனர். ஆனால், மைக் பெலாக் ரொம்ப ஜாலி பேர்வழி. எப்போதும், ஊர் சுற்றுபவர். வீட்டுச் சிறையை அவர் விரும்பவில்லை. அவர் கோவிட் தொற்று பாதிக்கப்பட்டவர் என்பதற்கான அடையாளமாக அவரது கையில், ஃபேண்ட் மாட்டப்பட்டிருந்தது. அந்த ஃபேண்ட் உடன், கடற்கரைக்குச் சென்ற அவர், அங்கு தனது கால்களை நனைத்து விளையாடியுள்ளார். இதைக் கண்ட போலீஸ்காரர் ஒருவர், ‛ஹலோ பெரியவரே... என்ன கோவிட் காலத்துல இப்படி வந்து நிற்குறீங்க... இது தப்பு’ என கண்டித்து, அவரை கைது செய்துள்ளார். 


அதன் பின் அவரை அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது மைக் பெலாக் செய்த தவறு குறித்து நீதிபதி விசாரித்துள்ளார். அதை அவரும் ஒப்புக்கொள்ள, அவரது வயதை கருத்தில் கொண்டு, அவருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், அந்த அபராதத்தை கட்ட முடியாது என மைக் பெலாக் கூறியுள்ளார். அபராதத்தை செலுத்தாவிட்டால், சிறை செல்ல நேரிடும் என நீதிபதி தெரிவிக்க, அதற்கு தான் தயார் என மைக் தெரிவித்துள்ளார். 






இதைத் தொடர்ந்து, மைக்கை அங்குள்ள சிறையில் ஒரு நாள் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். கோவிட் தொற்று காலத்தில் விதிக்கப்பட்ட விதியை மீறியதற்காக ஒரு நாள் சிறையில் அடைக்கப்பட்டார் மைக் பெலாக். இந்த சம்பவம், இஸ்ரேலில் பரபரப்பாக பேசப்படுகிறது.