மேற்கத்திய நாடுகளில் ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதியில் ஹாலோவின் கொண்டாட்டங்கள் களைக்கட்டுவது வழக்கம்.


அந்த வகையில் இந்த ஆண்டு ஹாலோவின் திருவிழா நாளை (அக். 31) கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன.


பண்டைய பேகன் பாரம்பரிய விழாவில் இருந்து உருவெடுத்த ஹாலோவின் நாளில், தங்கள் முன்னோர்கள் ஆவிகளாக மீண்டும் வந்து பார்ப்பர் என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வந்துள்ளது.


 






காலப்போக்கில் இந்த நம்பிக்கைகள் தாண்டி, கொண்டாட்டமாக பேய்கள் போன்று மாறுவேடங்கள் பூண்டு விருந்துகளில் கலந்து கொள்வது, பேய்களை ஈர்க்கும் குறும்பான விளையாட்டுகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்களை ராட்சத வடிவங்களில் செதுக்குவது என வேடிக்கை விளையாட்டுகளுடன் மக்கள் இந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக அமெரிக்காவில் உலகின் மிகப்பெரிய பூசணிக்காயில் கழுகு உருவத்தை செதுக்கி காட்சிப்படுத்தி சாதனை புரிந்துள்ளனர். இந்தப் புகைப்படம் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.


 






இந்த ஹாலோவின் திருவிழா உலகம் முழுவதும் வெவ்வேறு வழக்கங்களுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.


ஐரோப்பிய நாடுகளில் அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, மெக்சிகோ, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளிலும் பரவலாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.