உலகின் மிகப்பெரிய மின்சார பயணக் கப்பல் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது. சீனாவின் மத்திய ஹூபே மாகாணத்தில் உள்ள யிச்சாங்கில் உள்ள துறைமுகத்தில் யாங்சே ஆற்றில் வலம் வந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது 'வொண்டர் ஆப் தி சீஸ்'. இது, ஓசிஸ் கிளாஸ் (Oasis Class)-இன் ஐந்தாவது பயணிகள் கப்பலாகும். இறுதி கட்ட தயாரிப்பு பணிகள் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள மார்செயிலில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணிகள் அனைத்தும் நிறைவுற்று பயணத்தை தொடங்கி உள்ளது. ஒண்டர் ஆஃப் தி சீஸ் கப்பலின் ஒட்டுமொத்த எடை 2,36,857 டன் ஆகும். உண்மையில் இது மிக அதிக எடையாகும். இந்த அதிகபட்ச அளவின் காரணத்தினால் முன்னதாக மிக உலகின் மிக பெரிய கப்பல் என்ற மகுடத்தைச் சூடியிருந்த சிம்பொனி ஆஃப் தி சீஸ், தனது பட்டத்தை இழந்திருக்கின்றது.



பிரமாண்ட உருவத்தின் காரணமாக தற்போது உலகின் மிகப் பெரிய கப்பல் என்ற புகழாரத்தை ஒண்டர் ஆஃப் தி சீஸ் பெற்றிருக்கின்றது. இக்கப்பலில் ஒரே நேரத்தில் 6,988 பயணிகள் பயணிக்க முடியும். இத்துடன், 2,300 பணியாளர்களும் இக்கப்பலில் இடம் பெற முடியும். ஒட்டுமொத்தமாக 1,188 அடி நீளத்தில் இக்கப்பல் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி 100 கேபின்கள் இக்கப்பலில் உள்ளன. மேலும், ஓர் நட்சத்திர விடுதியில் இருப்பதைக் காட்டிலும் அதிக சொகுசான மற்றும் பொழுதுபோக்குகளை வழங்கும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது. இதன்படி, நீச்சல் குளம், பார் மற்றும் சன் லவுஞ்சர்களுடன் கூடிய பிரத்யேக டெக் உள்ளிட்டவையும் இந்த கப்பலில் இடம் பெற்றிருக்கின்றன.






ஆகையால், நட்சத்திர விடுதியில் இருப்பதைக் காட்டிலும் பன் மடங்கு அதிக சொகுசான அனுபவத்தை ஒண்டர் ஆஃப் தி சீஸ்-இல் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரிகின்றது. இந்த கப்பலில் பயணிப்பது சமமான தரையில் சறுக்கி செல்வது போல இருந்தது என்று பயணித்த பயணி ஒருவர் கூறியுள்ளார். இந்த கப்பலின் கேப்டன் சென் கோயி பேசுகையில், "இதில் ஏதாவது கோளாறு ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க நானே இதனை தனியாக இயக்கிப்பார்த்தேன். இப்போது எல்லாம் கம்பியூட்டர்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. மின்சார பயன்பாடு, சார்ஜ் நீடிப்பு, எல்லாம் தானியங்கியாக கண்காணிக்கப்படுகிறது." என்றார்.