இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு பால், அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள் மூடப்பட்டுள்ளன. 


இலங்கையில் தற்போது ஒரு கிலோ அரிசி 448 இலங்கை ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் பாலின் விலை ரூ.263-க்கு விற்கப்படுகிறது. சர்க்கரை கிலோ ரூ.280 ஆக உள்ளது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.1.41 லட்சத்துக்கு விற்பனை ஆகிறது. சிலிண்டரின் விலை 2,675 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் விளிம்புநிலை மக்களுடன் நடுத்தரக் குடும்பத்தினரும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். 


இலங்கையில் 2 நாட்களுக்கு டீசல் இல்லை என்றும், இதனால் தேவையின்றி வரிசையில் நிற்க வேண்டாம் என்றும் அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிபேட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இன்றும் நாளையும் டீசல் பெற முடியாது என பெட்ரோலிய கூட்டமைப்பு தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். 


அதேபோல், மார்ச் 30ம் தேதி (இன்று) முதல் மின்சார விநியோகத்தில் 10 மணிநேரம் தடை விதிக்குமாறு இலங்கை மின்சார வாரியம் வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் ஜானக ரத்நாயக்க தகவல் தெரிவித்திருந்தார். 






மேலும், 750 மெகாவாட் வெப்பத் திறனுக்கான எரிபொருள் கிடைக்காத காரணத்தினால் மின்வெட்டு காலத்தை 10 மணிநேரமாக அதிகரிக்கஇலங்கை மின்சார வாரியம் முயன்றதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


உக்ரைன் மோதல் காரணமாக இலங்கையில் மட்டுமன்றி உலகளவில் பெற்றோல் மற்றும் டீசல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இலங்கையில் கடந்த சில வாரங்களாக டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும், அவர்களின் உள்ளூர் நாணயம் பெரும் பாதிப்பை சந்தித்ததாலும், இலங்கை எங்களுடைய நாட்டிடம் எரிபொருளைக் கோரியது. இறக்குமதி செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. எண்ணெய், பால் தொடர்பான பொருட்கள், சமையல் எரிவாயு, முன் சொந்தமான வாகனங்கள் போன்ற பொருட்கள் இப்போது அதிக பணத்திற்கு விற்கப்படுகின்றன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண