அமெரிக்காவைச் சேர்ந்த ஹோவர்டு டக்கர், 'உலகின் மிகவும் வயதான மருத்துவர்' என்ற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். 100-வயதாகியும் ஓய்வின்றி இன்றும் மருத்துவம் பார்த்து வருகிறார்.


அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் பகுதியை சேர்ந்தவர் ஹோவர்டு டக்கர் (Howard Tucker). கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில் 98 வருடம், 231 நாட்கள் வயதாகும் போது, டக்கர் உலகின் 'மிகவும் வயதான பயிற்சி மருத்துவர்' என்ற சாதனையை படைத்தார். 100 வயதை எட்டியும், 'இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை' என தொடர்ந்து மருத்துவ சேவை செய்து வருகிறார். வாழ்நாள் முழுவதும் மருத்துவ சேவை செய்வதே என் நோக்கம் என்று தெரிவித்து வருகிறார்.

89 வயதாகும் அவரது மனைவி சூ, (Sue)உளவியல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். ஜூலை மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடும் நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அப்போது, ஜூம் செயலி மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வந்துள்ளார்.




கின்னஸ் சாதனை குறித்து கூறுகையில், ”இதனால் நான் பெருமை கொள்கிறேன். இந்த பாராட்டு மூலம் நான் 1947-ல் எப்படி இருந்தேனோ அதே போல மக்களுக்கு மருத்துவம் செய்வேன். நான் மருத்துவ சேவையை தொடங்கியபோது அன்றாடம் ஏதாவது ஒன்றை கற்றுக்கொண்டே இருப்பேன். எனக்கு இந்த சாதனையால் பெரிதும் மரியாதையாக கருதுகிறேன்.” என்றார்.


உலகின் மிக வயதான நபர்களில் ஒருவராக பட்டியலிடப்பட்ட முடிதிருத்தும் நபரின் இரங்கல் செய்தியை படித்த போதுதான், ஹோவர்டு 'மிகவும் வயதான மருத்துவர்' என்ற பட்டத்திற்கான விண்ணப்பிக்க தூண்டுதலாக இருந்தது. ஒரே வயதுடையவர்கள் என்பதால், தன்னால் பதிவுகளை உடைக்க முடியும் என்பதை புரிந்து கொண்டார். கின்னஸ் உலக சாதனைக்கு முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அவரது பேரன் ஆஸ்டின் அவருக்கு உதவியுள்ளார்.




மேலும் வாசிக்க..


நாளை கூடுகிறது சட்டப்பேரவை! எதிர்க்கட்சித் துணைத்தலைவர் யார்? - ஓபிஎஸ் அளித்த பதில்


10 நாட்களாக கல்லூரிக்குள் சுற்றித்திரிந்த புலி பத்திரமாக மீட்பு!


IPL 2023 Auction: ஜடேஜாவை குறிவைக்கும் டெல்லி, பெங்களூரு அணிகள்; சிஎஸ்கேவிற்கு விளையாட வாய்ப்பே இல்லையா?