IPL 2023 Auction: 2023 ஐபிஎல் போட்டியில் ஜடேஜாவை பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் வாங்க தீவிரம் காட்டி வருகின்றன.  

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடருக்கு முன்பதாக ஐபிஎல் மினி அக்கேஷன் நடைபெறும் இதில் நடப்பு தொடரில் உள்ள அணி வீரர்கள் தான் உள்ள அணியை விட்டு விலக நினைத்தால் விலகலாம். அதேபோல் அணியில் உள்ள வீரரை வெளியேற்றிவிட்டு அவரை வாங்கிய விலையுடன் அணிக்கு வழங்கப்பட்ட தொகையில் மீதமுள்ள தொகையினைக் கொண்டும் வேறொரு வீரரை வாஙக முடியும். ஆண்டு தோறும் நடைபெறும் இந்த மினி அக்கேஷனில் அனைத்து அணிகளும் பங்கேற்கும் என்றாலும் டெல்லி கேப்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு முக்கியமான அக்கேஷனாக இருக்கும். 

ஆனால் இந்த ஆண்டு ஒரு வீரரை வாங்க இரு அணிகள் மினி அக்கேஷனில் முட்டி மோதவுள்ளன. அது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா. ஏற்கனவே கடந்த ஐபிஎல் தொடரின் பாதியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகினார். அதற்கு முன்னதாக அணியை தொடரின் தொடக்கத்தில் இருந்து கேப்டனாக வழி நடத்தினார். தொடரின் பாதியில் தோனியிடம் அணியை ஒப்படைத்துவிட்டு போட்டியில் பங்கேற்காமல் இருந்த ஜடேஜா அதைத் தொடர்ந்து தொடரில் இருந்து விலகினார். அதன் பின்னர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சென்னை அணி தொடர்பாக அவர் பதிவிட்டு இருந்த பதிவுகளை நீக்கினார். அதன் பின்னர் சிஎஸ்கே அணித் தலைமைக்கு அவர் அனுப்பிய இதயப் பூர்வமான பதிலையும் தனது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இனிவரும் ஆண்டில் நடக்கவுள்ள 16வது ஐபிஎல் போட்டித் தொடரில் அவர் சிஎஸ்கே அணியில் நீடிக்க மாட்டார் என கூறப்படுகிறது. மேலும், அவரை டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ஜடேஜாவை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், டெல்லி அணி நேரடியாகவே சிஎஸ்கே அணியுடன் பேசி வருவதாகவே கூறப்படுகிறது. இந்த மினி அக்கேஷனில் மிகவும் கவனம் பெறும் வீரராக ரவீந்திர ஜடேஜா இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர் இதுவரை 210 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், 167 போட்டிகளில் மட்டுமே பேட்ஸ்மேனாக களம் இறங்கியுள்ளார். இதில் அவர் 183 பவுண்ட்ரிகளும் 90 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் இவரது ஸ்ட்ரைக் ரேட் 127.5 ஆக உள்ளது. 

மேலும், இந்த ஆண்டு நடக்கவுள்ள மினி அக்கேஷன் டிசம்பர் மாதத்தில் 16ஆம் தேதி  நடைபெறும் எனவும் இந்த மினி அக்கேஷன் பெங்களூருவில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது. இதில் ஒவ்வொரு அணியும் தலா 95 கோடிவரை ஏலம் எடுக்கலாம் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.