ஆரம்பத்தில், மைக்கேல் செல்லி பட்லரின் கரு நன்றாக முன்னேறி, பத்து மாதமும் ஆரோக்கியமாக வளரும் பாதையில் இருப்பதாகத் தோன்றியது. ஆனால் ஜூலை 4, 2020 அன்று, அவசர அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் தனது உள்ளூர் மருத்துவமனையிலிருந்து நாட்டின் முன்னணி நியோனாட்டாலஜி மற்றும் குழந்தை மருத்துவப் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படும் பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்திற்கு (யுஏபி) விரைவாக மாற்றப்பட்டார். தாயின் விருப்பத்தைத் தொடர்ந்து, பிராந்திய நியோனாடல் தீவிர சிகிச்சைப் பிரிவில் (RNICU) அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு விரைவாக செயல்பட்டு, 21 வாரங்கள் 1 நாள் (148 நாட்கள்) கர்ப்பகால வயதில் மதியம் 1 மணியளவில் தனது குழந்தையை பிரசவித்தார். ஜூலை 5 அன்று. அவரது அசல் காலக்கெடு நவம்பர் 11 ஆகும். ஒரு முழு-கால கர்ப்பம் பொதுவாக 40 வாரங்கள் அல்லது 280 நாட்கள் ஆகும். ஆனால் 132 நாட்கள் - கிட்டத்தட்ட 19 வாரங்கள் - முன்கூட்டியே பிரசவித்தார். அதாவது அவரது ஐந்தாவது மாதத்தில் குழந்தை பிறந்தது.


புதிதாகப் பிறந்த குழந்தை 420 கிராம் (14.8 அவுன்ஸ்) எடையை மட்டுமே இருந்தது, இது ஒரு கால்பந்து பந்தின் அளவு மட்டுமே ஆகும். "அந்த வயதில் குழந்தைகளை சாதாரணமாக வெளியில் எடுப்பதில்லை என்று மருத்துவ ஊழியர்கள் என்னிடம் சொன்னது, மன அழுத்தத்தை உண்டாக்கியது," என்று கின்னஸ் உலக சாதனைக்கு ஒரு பிரத்யேக பேட்டியில் செல்லி கூறினார். பிறந்த குழந்தைக்கு கர்டிஸ் என பெயரிடப்பட்டது, கர்டிஸ் பிறப்புக்கு பிறகான சிகிச்சைக்கு நன்கு ஒத்துழைத்ததாகவும், வாரங்கள் செல்ல செல்ல, அவர் மேலும் மேலும் வலுவாக வளர்ந்தார் என்றும் மருத்துவர்கள் கூறினார்.



அவரை குணமாக்குவதில் பெரும் சவால்கள் நிறைந்திருந்தன, அவருக்கு பல மாதங்களுக்கு பகலிரவு முழுக்க கவனிப்பு தேவைப்பட்டது. கர்டிஸ் இரட்டைக் குழந்தைகளில் ஒருவராக இருந்ததால், இன்னொரு குழந்தையை காப்பாற்ற முடியாத வலி பெரிதாய் தெரியவில்லை. அதே நாளில் அவருடன் ஒரு பெண் குழந்தையும் பிறந்தார், ஆனால் அந்த குழந்தை வளர்ச்சி குறைவாக இருந்தும், அவரது சகோதரர் போல சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக, அந்த குழந்தை பிறந்த ஒரு நாளில் இறந்தது. முன்கூட்டியே பிறந்த பெரும்பாலான குறைப்பிரசவ குழந்தைகளுக்கு, நீண்ட காலம் வாழ்வதாற்கான வாய்ப்புகள் குறைவு என்பதே கர்டிஸின் மீட்சியை மிகவும் சிறப்பானதாக மாற்றுவதற்கு காரணம்.


கர்டிஸின் அடுத்தடுத்த சிகிச்சையில் பெரிதும் ஈடுபட்டிருந்த, இரட்டைக் குழந்தைகளின் பிரசவத்தை மேற்பார்வையிட்ட நியோனாட்டாலஜிஸ்ட் டாக்டர் பிரையன் சிம்ஸ், கூறும்போது, "இந்த வயதில் குழந்தைகள் உயிர்வாழ மாட்டார்கள் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கர்ட்டிசின் அம்மா 'நம்மால் முடியுமா? என் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்?' என்று கூறிக்கொண்டே இருந்தார்". RNICU மற்றும் பரந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் மையத்தில் 275 நாட்கள் (சுமார் ஒன்பது மாதங்கள்) ஒரு பெரிய குழு கவனித்துக்கொண்ட பிறகு, கர்டிஸ் 6 ஏப்ரல் 2021 அன்று வீட்டிற்குச் செல்லும் அளவுக்குத் தகுதியானவர் என்று தீர்மானிக்கப்பட்டது. மருத்துவமனையிலிருந்து அவர் வெளியேற்றப்படுவது, வடிவமைக்கப்பட்ட மருந்து மற்றும் பாட்டில் ஆக்சிஜன் மற்றும் உணவுக் குழாய் போன்ற சிறப்பு உபகரணங்களால் மட்டுமே சாத்தியமானது. எவ்வளவு உபகரணங்கள் இருந்தும் குழந்தையின் ஒத்துழைப்பு அவரது அசாதாரண பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக இருந்தது.



கர்டிஸ் அல்லது அவரது குடும்பத்தினர் அவரை அழைக்கும் "பூடி", ஜூலை 5, 2021 அன்று தனது முதல் பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த கட்டத்தில் அவர் உயிர் பிழைக்க மிகவும் குறைமாத குழந்தையாக தகுதி பெற்றார். அவருக்கு மூன்று உடன்பிறப்புகள் உள்ளனர், அவர்களில் மூத்தவர் குளிப்பது, உடை உடுத்துவது மற்றும் உணவளிப்பது போன்ற அன்றாடப் பராமரிப்பில் உதவ விரும்புகிறார். "அவர் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார். நான் ஏற்கனவே சோர்வாக இருக்கிறேன்!" செல்லி தனது மகனின் ஆற்றல் நிலைகள் பற்றி கேட்டபோது புன்னகையுடன் கூறினார். "நான் அவரைப் பற்றி மிகவும் பெருமைப்படுகிறேன், ஏனென்றால் அவர் எங்கிருந்து வந்தார், இப்போது அவர் எங்கிருக்கிறார், வித்தியாசத்தை என்னால் உணர முடிகிறது. இந்த சாதனையைப் பெற்றிருப்பது கர்டிஸ் செய்த ஒரு ஆசீர்வாதம் மற்றும் கின்னஸ் உலக சாதனைகள் அவரை ஏற்றுக்கொண்டதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்." இப்போது நவம்பரில் - முன்கூட்டியே பிறக்கும் குழந்தைகள் விழிப்புணர்வு மாதமாகும் - கர்டிஸ் முழு பத்து மாதமும் வயிற்றில் இருந்திருந்தால் அவரது முதல் பிறந்தநாளை பிறந்தநாளான இன்று (நவம்பர் 11) எப்படி இருக்கும் என்பதைப் கவனிக்கிறார்கள்.  


அந்த நேரத்தில், இது மிகவும் சவாலான முதல் நிமிடங்கள், மணிநேரம் மற்றும் நாட்களைக் கடந்து செல்வது பற்றியது. "ஆக்ஸிஜனுக்கு அவர் ஒத்துழைத்தார், அவரது இதயத் துடிப்பு அதிகரித்தது, அவரது பல்ஸ் எண்ணிக்கை அதிகரித்தது… அந்த குழந்தை எங்களுக்கு நிறைய பாசிடிவான கருத்துக்களைக் கொடுத்தார், கர்டிஸ் உயிர்வாழ விரும்பினார்." என்று டாக்டர் சிம்ஸ் தெரிவித்தார். ஆரம்பத்திலிருந்தே, டாக்டர் சிம்ஸ் கர்டிஸின் முன்னேற்றத்தை கண்டு வியந்து, "கிட்டத்தட்ட 20 வருடங்களாக நான் இதைச் செய்து வருகிறேன்... ஆனால் இந்த இளம் குழந்தையைப் போல் வலிமையுடன் இருப்பதை நான் பார்த்ததில்லை... கர்டிஸிடம் ஏதோ ஒரு சிறப்பு இருந்தது." என்றார்.



இந்த தனித்துவமான குழந்தையால் டாக்டர் சிம்ஸ் மட்டும் அதிர்ச்சியடையவில்லை. UAB இன் நியோனாட்டாலஜி பிரிவில் உள்ள உதவிப் பேராசிரியர் டாக்டர் கோல்ம் டிராவர்ஸ், மிகவும் குறைப்பிரசவ குழந்தைகளுக்கான மருத்துவமனையின் கோல்டன் வீக் திட்டத்தின் இணை இயக்குநராக உள்ளார். கர்டிஸின் 21-வாரம் 1-நாள் கர்ப்பகால வயது உலக சாதனையைப் படைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய முதல் நபரும் அவர்தான், மேலும் பதிவு விண்ணப்ப செயல்முறையில் செல்லிக்கு உதவுவதில் அவர் முக்கியப் பங்காற்றினார்.


டாக்டர் ட்ராவர்ஸ் கூறும்போது, "கர்டிஸைப் பார்த்ததும் முதலில் என்னைத் தாக்கியது அவர் எவ்வளவு சிறியவர், அவரது தோல் எவ்வளவு உடையக்கூடியது என்பதுதான். அவர் உயிருடன் இருப்பது மற்றும் சிகிச்சைகளுக்கு அவர் ஒத்துழைத்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பத்தில் கர்டிஸ் அவரை உயிருடன் வைத்திருக்க அவரது இதயம் மற்றும் நுரையீரலுக்கு நிறைய சுவாச ஆதரவு மற்றும் மருந்துகள் எடுத்துக்கொண்டிருந்தார். அடுத்த சில வாரங்களில், நாங்கள் சுவாச ஆதரவின் அளவைக் குறைக்க முடிந்தது... அவருக்கு சுமார் மூன்று மாதங்கள் இருந்தபோது, ஒரு வழியாக அவரை வென்டிலேட்டரில் இருந்து வெளியேற்ற முடிந்தது. அது எனக்கு ஒரு சிறப்பான தருணம். அவர் வீட்டிற்குச் செல்லும் போது, ​​அவரையும் அவரது தாயாரையும் கவனித்துக் கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது. இந்த சிறிய மக்களைக் கவனித்துக்கொள்வது ஒரு பாக்கியம். அவரது அம்மா அனுபவித்த எல்லாவற்றிற்கும் பிறகு... என்ன நடக்கப் போகிறது என்று தெரியாத பல மாதங்களுக்குப் பிறகு, கர்டிஸ் வீட்டிற்குச் சென்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், மேலும் அவர் கின்னஸ் உலக சாதனைகளில் இருந்து அங்கீகாரம் பெற வாய்ப்பு வழங்குவதற்காக அவர் வாதாடினார்." என்று கூறினார்.


வியக்கத்தக்க வகையில், கர்டிஸ் முந்தைய சாதனையாளரான விஸ்கான்சினைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹட்சின்சனுக்கு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு டெலிவரி செய்யப்பட்டார், அவர் 21 வாரங்கள் 2 நாட்கள் அதாவது 131 நாட்களுக்கு முன்னதாகவே 5 ஜூன் 2020 அன்று பிறந்தார். ரிச்சர்டுக்கு முன், இந்த சாதனை 34 ஆண்டுகளாக உடைக்கப்படாமல் இருந்தது. ஜேம்ஸ் எல்ஜின் கில், கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள ஒட்டாவாவில் பிரெண்டா மற்றும் ஜேம்ஸ் கில் ஆகியோருக்கு 21 வாரங்கள் 5 நாட்களில் 128 நாட்கள் முன்கூட்டியே, 20 மே 1987 இல் பிறந்தார். மிக சமீபத்தில், இந்த சாதனையை ஃப்ரீடா மான்கோல்ட் சமன் செய்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 7 நவம்பர் 2010 அன்று ஜெர்மனியின் ஃபுல்டாவில் யுவோன் மற்றும் ஜான் மாங்கோல்டுக்கு பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.