போர்ச்சுகல் நாட்டில் தொழிலாளர் சட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. பணி நேரத்துக்குப் பின்னர் ஊழியர்களுக்கு ஃபோன் செய்வது, குறுந்தகவல் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது சட்ட விரோதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


போர்ச்சுகல் நாட்டில் கடந்த வாரம் தொழிலாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதில் பல்வேறு முடிவுகளும் எட்டப்பட்டன. அதன்படி, வீட்டிலிருந்து வேலை பார்ப்போருக்கு இணைய வசதி, மின்சாரம் உள்ளிட்டவற்றிற்காக உரிய தொகையை வழங்க வேண்டும், பணி நேரத்தைத் தாண்டி ஊழியர்களை தொலைபேசியில் அழைக்கக் கூடாது. அவர்களுக்கு குறுந்தகவல் அனுப்பக்கூடாது, ஊழியர்கள் பணி நேரம் முடிந்தவுடன் அலுவலக மொபைல் உள்ளிட்ட உபகரணங்களை அனைத்துவைத்துக் கொள்ளலாம் போன்ற பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
அதில், உபகரணங்களை அனைத்து வைப்பதை போர்ச்சுகள் தொழிலாளர் ஆணையம் நிராகரித்துவிட்டது.
அதற்குக் காரணமாக ஏற்கெனவே சுயாதீன ஊழியர்கள் சலுகைகளை தவறாகப் பயன்படுத்துவதால் இதனை அனுமதிக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.


டிஜிட்டல் நொமாட் விசா, என்ற பெயரில் போர்ச்சுகலில் பணி புரிய விசா வழங்கப்படுகிறது. பெர்முடா, ஆன்டிகுவா, கோஸ்டரிகா நாடுகளில் பெருந்தொற்று காலத்தில் இவ்வகை விசா வழங்கப்பட்டது. 


pay for work-from-home expenses டிஜிட்டல் நொமேட் என்ற வார்த்தை மிரியம் வெப்ஸ்டர் டிக்‌ஷனரியில் பிரபலமாகியுள்ளது. கடந்த அக்டோபர் முதல் இந்த வார்த்தை அதில் இடம்பெற்றுள்ளது. இணையம் வாயிலாகவே வேலை செய்யும் ஒருவரை டிஜிட்ட நொமேட் என அழைக்கின்றனர். இணையம் வாயிலாகவே வேலை செய்வதால் டிஜிட்டல் நொமேட்ஸ் எங்கிருந்து வேண்டுமானால் வேலை செய்ய முடிகிறது.


இத்தகைய டிஜிட்டல் நொமேட்களை வரவேற்பதாக போர்ச்சுகல் தெரிவிக்கிறது.





இது தொடர்பாக போர்ச்சுகலின் தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு துறை அமைச்சர் அனா மெண்டஸ் கோடினோ, பெருந்தொற்று டிஜிட்டல் நொமேட்ஸ் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கான தேவையை உருவாக்கியுள்ளது என்றார். இந்த வகையில் டிஜிட்டல் நொமெட்ஸ்கு போர்ச்சுகலில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.


8 மணிநேரம் வேலை செய்யும் ஓர் ஆலைத்தொழிலாளி, தனது வேலைக்கு உரிய நேரத்தில் கிளம்பித் தயாராக வேண்டும். கால தாமதம் ஏற்பட்டு அவர் உரியநேரத்திற்கு வராமல் போனால், அவருக்கு அன்றைய தினத்திற்கான கூலி கிடைக்காது. ஆனால், தனது சோர்வு காரணமாகவோ அல்லது தாமதமாக கிளம்ப நேரிட்டாலோ, ஓர் ஐ.டி. தொழிலாளி ஒரு முன்னறிவிப்பை மட்டும் தனது மேலாளரிடம் தெரிவித்து விட்டு, வீட்டில் இருந்தபடியே தனது வேலைகளைத் தொடர முடியும்.
அநேக நேரங்களில், தமது வீட்டுவேலைகளை கவனித்துக் கொள்ள வீட்டில் இருந்து வேலைசெய்யும் (WFH) இவ்வேலைமுறை  ஐ.டி. தொழிலாளர்களுக்கு ஒரு வரமாகவே இருந்து வருகிறது.


இருப்பினும் 8 மணி நேர வேலையைத் தேடி பளு கூடும்போது தான் டிஜிட்டல் நொமேட்ஸ்களுக்கும், ஒர்க் ஃப்ரம் ஹோம் ஊழியர்களுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.