14 வயது சிறுமி ஒருவர் தனது  முதுகுத்தண்டை வளைத்து  கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.


உலகிலேயே அதிகம் வளையக்கூடிய பெண் அதாவது  'World's Most Flexible Girl' என அழைக்கப்படுகிறார் 14 வயதான  லிபர்ட்டி பாரோஸ். . இங்கிலாந்தின் பீட்டர்பரோவில் வசிக்கும் லிபர்ட்டி, அக்டோபர் 5 அன்று, தனது உடலைப் பின்னோக்கி வளைத்து, தனது தலையை கால்கள் மற்றும் மார்பு வழியாக  தலைக்கு கொண்டு வந்து 30  வினாடிகளில் பதினொன்றரை வகையான மாற்றங்களை செய்திருக்கிறார்.  முதுகுத்தண்டை வளைத்து செய்த இந்த முயற்சி அவருக்கு கின்னஸ்  சாதனையாளர் என்ற அங்கீகாரத்தை வழங்கியிருக்கிறது.இது குறித்து சிறுமி லிபர்ட்டி பாரோஸ் கூறுகையில் “நான் ஒரு கின்னஸ் உலக சாதனையாளர் என்று சொல்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். இது ஒரு அற்புதமான சாதனை. என்  வளையும் தன்மையை நான் உணர்ந்துகொண்டது நான் நினைத்ததை விட என்னை மேலும் அழைத்துச் சென்றது. இது என் வாழ்க்கையை மாற்றிவிட்டது, ”என்று அவர் தெரிவித்துள்ளார்.






 


லிபர்ட்டி ஏற்கனவே தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் .  ஸ்பெயின் காட் டேலண்ட் என்னும் திறமையை அங்கீகரிக்கும்  நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராகவும் உள்ளார்.  2017 ஆம் ஆண்டு பாப் பாடகி ரிஹானாவின் ஒரு நடன அசைவுகளை முயற்சி செய்து பார்க்கும் பொழுதுதான் தன்னால் இந்த அளவிற்கு வளைய முடியும் என்பதை லிபர்ட்டி பாரோஸ் முதன் முதலாக உணர்ந்திருக்கிறார். 14 வயது சிறுமியாக இருந்தாலும் லிபர்ட்டிக்கு தான் எதிர்காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்பது குறித்த தெளியாவான சிந்தனை இருக்கிறது. “ ஆக்‌ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது கனவு. எனது சொந்த செயல்திறன் பள்ளியை நான் திறக்க விரும்புகிறேன், அங்கு நான் எவ்வாறு நடனம் மற்றும் நகர்த்துவது என்பதை மக்களுக்கு கற்பிக்க முடியும், ” என்கிறார்.






 


லிபர்ட்டியின் தந்தை ராம் பாரோஸ் தனது மகளுக்கு பயிற்சியளித்த இங்கிலாந்தை சேர்ந்த  பீட்டர்பரோ ஜிம்னாஸ்டிக்ஸ் கிளப்பை வெகுவாக பாராட்டினார். தற்போது ஸ்பெயின் காட் டேலண்ட் நிகழ்ச்சியின் இரண்டாவது சுற்றிற்கு தயாராகி வரும் லிபர்ட்டி , படிப்பிலும்  சிறப்பாகவே இருக்கிறாள் என்கிறார் ராம் பாரோஸ் பெருமிதமாக !