அந்த காலத்தில் ஒரு தகவலை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்த்ததில் முக்கிய பங்காற்றிய முதல் ஊடகம் என்றால் அது வானொலி. நாகரிக வளர்ச்சியால் இன்று பலரது வீடுகளில் வானொலி பெட்டிகளுக்கு பதிலாக, ஸ்மார்ட் போன்களும் ஸ்மார்ட் டிவிக்களும் இடம்மாற்றப்பட்டிருந்தாலும், வானொலி இன்னும் தன்னைப் புதுபித்துக்கொண்டு ஒலி அலைகளாக தனது சேவையை செய்துகொண்டே இருக்கிறது. 




எப்போது பிறந்தது வானொலி?


வானொலியின் தந்தை என அழைக்கப்படும் இத்தாலியை சேர்ந்த மார்க்கோனி என்பவரால் கடந்த 1888 ஆம் ஆண்டு கண்டிபிடிக்கப்பட்ட இந்த வானொலி தொழில் நுட்பம், 1901 ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. வானொலியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வகையில் ஐநா துணை அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13-ஐ உலக வானொலி நாளாக 2011-ல் அறிவித்தது.


இந்தியாவில் எப்போது? 


இந்தியாவில் 1927 ஆம் ஆண்டு மும்பை, மற்றும் கொல்கத்தாவில் வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 1936 ஆம் ஆண்டு மத்திய அரசின் செய்தி மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகத்தின் கீழ், நிறுவப்பட்டு, பின்னர் தன்னாட்சி வழங்கப்பட்ட பிரசார் பாரதி அங்கமாக மாறியது.


ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யா உள்ளிட்ட 16 அயல்நாட்டு மொழிகளிலும், 24 இந்திய மொழிகளிலும் உள்நாடுகளிலும் என இன்றைக்கு 208 ஒலிபரப்பு நிலையங்களோடு அகில இந்திய வானொலி நிலையம் செயல்பட்டு வருகிறது. 




தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, உதகை,  திருநெல்வேலி, தூத்துக்குடி, காரைக்கால், நாகர்கோவில், கொடைக்கானல் ஆகிய இடங்களில் வானொலி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. 


வானொலியின் முக்கியத்துவம் 


வானொலிகள் திரைப்பட பாடல்கள் மட்டுமல்லாது செய்திகள், கதை, கவிதை, நாடகங்கள், நாட்டுப்புற பாடல்கள் என பலவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றியது. அதே போல வேளாண்மையில் இந்தியா அடைந்திருக்கும் வளர்ச்சியிலும் வானொலிகள் முக்கிய பங்காற்றியிருக்கின்றன. 






கடந்த 2004 ஆம் ஆண்டு சுனாமியின் போதும், கடந்த 2018 ஆம் ஆண்டு கஜா புயலின் போது மின்சாதனங்கள், மொபைல் சேவை ஆகியவை புயலின் பாதிப்பால் முடங்கின. அந்த நெருக்கடியான காலங்களில், வானொலிகள் ஆபத்பாந்தவனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண