உலக அளவில் மக்கள்தொகை அதிகரித்து வருவதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆண்டுதோறும் ஜூலை மாதம் 11 ஆம் தேதி ‘உலக மக்கள்தொகை தினம்’ ஆக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.


மக்களிடம் அதிகரிக்கும் மக்கள்தொகை காரணமாக என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகின்றன உள்ளிட்டவைகளை பொதுவெளியில் பேசுவதற்கு இந்தநாள் உருவாக்கப்பட்டது. United Nations Population Fund, கணிப்பின் படி, இந்தாண்டு உலக மக்கள்தொகை 8 மில்லியன் (800 கோடி) அளவுக்கு உயரும் என்று தெரிவிக்கிறது. இது 2011 ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில் 7 மில்லியன் ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.






உலக மக்கள் தொகை 2022:


இந்தாண்டு உலக மக்கள்தொகை தினத்தின் கருப்பொருள் "8 பில்லியனின் உலகம்: எல்லாருக்குமான நெகிழ்வுடன் கூடிய எதிர்காலத்தை நோக்கி - வாய்ப்புகளைப் பயன்படுத்துதல், அனைவருக்குமான உரிமைகள் மற்றும் தேர்வுகளை உறுதி செய்தல்" ( 'A world of 8 billion: Towards a resilient future for all - Harnessing opportunities and ensuring rights and choices for all') என்பதாகும்.

உலக அளவில் மக்கள்தொகையை குறைக்க நாம் என்ன செய்ய வேண்டும், நாடுகளின் திட்டங்களுடன் நாம் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாகும்.  ஐ.நா. சபை 2050 ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை தொடர்ந்து 10 கோடியை எட்டலாம் என்றும் தெரிவித்துள்ளது.





உலக அளவில் மக்கள்தொகை அதிகரிப்பதால், என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது. வறுமை, பொருளாதார சிக்கல் உள்ளிட்டவைகள் மிகவும் மோசமாகும் நிலமை இன்னும் வெகு தூரத்தில் இல்லை. 


United Nations Development Programme’s Governing Council 1989 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகை தினத்தை கொண்டாடப்பட முடிவெடுத்தது. 


உலக அளவில் நிகழும் சுகாரா பற்றாக்குறை காரணாமாக  உலகில் ஒரு நாளைக்கு 800க்கும் மேற்பட்ட பெண்கள் பிரசவத்தின் போது இறப்பதாக ஐ.நா., சபை அறிக்கையின் கூறுகிறது. 


மக்கள் தொகை அதிகரிப்பதால், உணவு பற்றாக்குறை, அடிப்படை வசதிகள் பற்றாக்குறை,குடிநீர் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் பாதிப்பு, வேலைவாய்ப்பின்மை, சுகாதார சீர்கேடு, கல்வி, போக்குவரத்து, பொருளாதார நெருக்கடி ஆகிய பிரச்னைகள் ஏற்படுவதாக ஐ,நா.சபை கூறுகிறது. இதனால் மக்கள்தொகையை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை பள்ளி உள்ளிட்ட அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.




மேலும் செய்திகளை காண, 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண