பாலை உலகளாவிய உணவாக அங்கீகரிப்பதற்காகவும் பால் தொழிலைக் கொண்டாடுவதற்காகவும் ஜூன் ஒன்றாம் தேதி சர்வதேச பால் தினமாக கொண்டாடப்படுகிறது. இது கடந்த 2001 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.


சர்வதேச பால் தினத்தின் நோக்கம் என்ன ?


உலக பால் தினம் கொண்டாடப்படுவதின் முக்கிய நோக்கம் , நம் வாழ்வில் பால் மற்றும் பால் பொருட்களின் மதிப்பைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்து. பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாக மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள கிட்டத்தட்ட ஒரு பில்லியன் மக்களுக்கு வருமான ஆதாரமாகவும் உள்ளன.இந்திய பொருளாதாரத்தில் பால் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்குறது. இந்தியாதான் பால் உற்பத்தி செய்யும் நாடுகளில் முதலிடத்தில் உள்ளது.







இந்த ஆண்டு கருப்பொருள்!


ஒவ்வொரு ஆண்டும் உலக பால் தினத்தன்று தீம் என அழைக்கப்படக்கூடிய கருப்பொருளை வெளியிடுவது வழக்கம் . அந்த வகையில் இந்த ஆண்டு காலநிலை மாற்றம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நெருக்கடி எப்படி உலகில் பால் வளத்தை குறைக்க போகிறது என்பதாகும். அடுத்த 30 ஆண்டுகளில் தொழில்துறையின் பசுமை வாயு உமிழ்வைக் குறைப்பதன் மூலம் ‘டெய்ரி நெட் ஜீரோ’வை அடைவதில் கவனம் செலுத்தப்படுகிறது.


உலக பால் தின வாழ்த்துக்கள் ! 
  
பால் நமது வாழ்க்கையின் அங்கம் . குழைந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே  ஒட்டுமொத்த ஊட்டச்சத்தும் கிடைக்கும் உணவாக பால் உள்ளது.அன்றாட வாழ்க்கையில் பால் சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தினாலும்  கூட அது நமக்கு எளிதில் கிடைக்கக்கூடிய அமிர்தம் ! அனைவருக்கும் சர்வதேச பால் தின வாழ்த்துக்கள்.