புகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். இதனை தடுப்பதற்கு மக்களிடையே விழிப்புணர்வு உருவாக்க வேண்டும். அதற்காக கொண்டாடப்படும் தினம் தான் மே 31. 


புகையிலை விளைவிக்கும் தீங்குகள்


புகை பிடிப்பதனால் கார்பன் மோனாக்சைடு உடலில் சென்று இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால் புற்றுநோய், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.


நிறுத்தினால் என்ன பயன்?


புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறை பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.



புகையிலை எதிர்ப்பு நாள் வரலாறு


புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை, உயிரிழப்புகளை தடுக்கும் நோக்குடன், 1987ஆம் ஆண்டு உலக சுகாதார அமைப்பால் புகையிலை ஒழிப்பு தினம் அறிமுகப்படுத்தப்பட்டு ஒவ்வொரு ஆண்டு மே மாதம் 31ம் தேதி புகை பிடிப்பதால் ஏற்படும் நோய் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.


June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


ஐநா வெளியிட்ட தகவல்


ஒவ்வொரு ஆண்டும், 8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புகையிலை பயன்பாட்டால் உயிரிழக்கின்றனர் என்று ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ளது. 60,00,00,000 மரங்கள் வெட்டப்படுகின்றன, 8,40,00,000 டன் கார்பன் டை ஆக்சைடு காற்றில் வெளியிடப்படுகிறது, மேலும் 22,00,00,00,000 டன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது, என உலக சுகாதார அமைப்பு மேலும் எடுத்துரைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, உலகளவில் புகையிலை, சுற்றுச்சூழலுக்கு பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிடுகிறது. உலக சுகாதார அமைப்பு இதன் மூலம் பெரிய அளவில் காடுகள் அழிக்கப்படுகின்றன, வனவிலங்குகள் உட்பட பல்லுயிர் இழப்பு ஆகியவை ஏற்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. பூமியில் நீர் குறைவதற்கும், புதைபடிவ எரிபொருள் மற்றும் உலோக வளங்கள் தீர்ந்துபோவதற்கும் இதுவே பொறுப்பாகும் என்று கூறுகிறார்கள்.






பிரச்சாரத்தின் மூலம் என்ன பயன்?


ஆஸ்திரேலியாவில் இது குறித்து ப்ரு வித்யாசமான முயற்சி கையில் எடுக்கப்பட்டது. அதனை சாத்தியப்படுத்துதல் அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனை ஆஸ்திரேலியா செய்து காட்டியுள்ளது. பொதுமக்கள் இடையே தொடர்ச்சியாக வெவ்வேறு வழிகளில் பிரச்சாரம் மேற்கொள்வதே அந்த திட்டம் ஆகும். இதனால் தற்போது சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக விட்டுவிடுறார்களா என்றால் இல்லை, இது மக்களிடையே சிகரெட் பிடித்தல் என்னும் செயலை அசாதாரணமான செயலாக பதிய வைக்கிறது. அதன் மூலம் புதிதாக சிகரெட் பிடிப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கணக்கெடுப்புகள் குறிப்பிடுகின்றன.