World Coronavirus Updates: உலகம் முழுவதும் 14.44 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30.76 லட்சத்தை கடந்தது.

Continues below advertisement

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  14 கோடியே 44 லட்சத்து 19 ஆயிரத்து 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில் உள்ளன. இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.



இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 44 லட்சத்து 19 ஆயிரத்து 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 70 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது.


குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 25 லட்சத்து 90 ஆயிரத்து 668 ஆக உள்ளது. ஒரு கோடியே 86 லட்சத்து 47 ஆயிரத்து 836 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 95 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.



கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 63 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 834 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்தம் 3 கோடியே 26 லட்சத்து ஆயிரத்து 17 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கக்கப்பட்டுள்ளனர். 5 லட்சத்து 83 ஆயிரத்து 308 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் ஒரே நாளில் 71 ஆயிரத்து 910 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 ஆயிரத்து 157 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் ஒரு கோடியே 41 லட்சத்து 22 ஆயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உயிரிழப்பு 3 லட்சத்து 81 ஆயிரத்து 687 யை கடந்துள்ளது.



கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


உலகளவில் நேற்று கொரோனா தொற்றால் 14 கோடியே 35 லட்சத்து 32 ஆயிரத்து 105 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 330 லட்சத்து 56 ஆயிரத்து 851 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் நேற்று 2 லட்சத்து 95 ஆயிரத்து 41 பேருக்கு பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919ல் இருந்து ஒரு கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89-ஆக அதிகரித்துள்ளது.  ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ல் இருந்து ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 530-ஆக உயர்ந்துள்ளது. பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 761 பேர் குணமடைந்துள்ளதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு கோடியே 29 லட்சத்து 53 ஆயிரத்து 821ல் இருந்து ஒரு கோடியே 31 லட்சத்து 8 ஆயிரத்து 582 ஆக உள்ளது.

Continues below advertisement