உலகம் முழுவதும் கொரோனா தொற்றால்  14 கோடியே 26 லட்சத்து 87 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதனையடுத்து, பல உலக நாடுகளுக்கு இந்த வைரஸ் வேகமாக பரவியது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் முதல் ஐந்து இடங்களில். இந்த தொற்றால் ஏராளாமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பல நாடுகளுக்கு பொருளாதார பிரச்னை ஏற்பட்டது.



கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டு கடந்த நிலையிலும், தொற்று பரவல் குறையாமல் அதிகமாகி வருகிறது. தற்போது, பல நாடுகளில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது.




இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் உலகளவில் கொரோனா தொற்றால் 14 கோடியே 26 லட்சத்து 87 ஆயிரத்து 165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.



குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 கோடியே 11 லட்சத்து 89 ஆயிரத்து 37 ஆக உள்ளது . ஒரு கோடியே 83 லட்சத்து 47ஆயிரத்து 144 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில்,  ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 40 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.


கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் இருக்கும் அமெரிக்காவில் புதிதாக 50 ஆயிரத்து 893 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 472 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். 


கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இந்தியா 2வது இடத்திலும் பிரேசில் 3வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.




 


 


உலகளவில் நேற்று கொரோனா தொற்றால் 14 கோடியே 19 லட்சத்து 87 ஆயிரத்து 33 பேர் பாதிக்கப்பட்டனர் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்து 32 ஆயிரத்து 205 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.



இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை நேற்று 1.50 கோடியை தாண்டியது. ஒரே நாளில்  2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு  கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109 - இல் இருந்து ஒரு  கோடியே 50 லட்சத்து 61 ஆயிரத்து 919- ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,619 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150-ல் இருந்து ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 769-ஆக உயர்ந்துள்ளது.


மேலும், நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் மே 1 முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது. தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், நாம் கட்டாயம் முக கவசம் அணியவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதால் மட்டுமே தொற்றை முழுமையாக ஒழிக்கும் முடியும்.