உள்ளூர் முதல் உலகம் வரையில் இன்றைய நாளின் துவக்கத்திற்கான முக்கிய தலைப்புச் செய்திகளின் தொகுப்பு இதோ. இரவு ஊரடங்கில் துவங்கி , கொரோனாவின் கோரத்தாண்டவம் வரை அத்தனை விபரங்களும் இதில் இடம் பெற்றுள்ளது. முழு தொகுப்பாக இல்லாமல் சுருக்கமாக செய்திகளை இந்த பகுதியில் அறிந்து கொள்ளலாம்.
*தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது; இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு அறிவிப்பு.
*இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் அரசு பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு. இரவு 10 மணிக்கு மேல் வாடகை கார்கள், ஆட்டோக்கள் இயங்கவும் தடை.
*இரவு நேர ஊரடங்கின்போது அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல தடை இல்லை. அதே போல் பெட்ரோல் நிலையங்கள் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
*சென்னையில் இரவு நேர ஊரடங்கு அமலானதும் சென்னை முழுவதும் வாகனச் சோதனை நடத்தப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தகவல்
*புதுச்சேரியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. தமிழகத்தைப் போலவே அங்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
*மே 1ஆம் தேதி முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கியது மத்திய அரசு
*தமிழ்நாட்டில் மே 2ஆம் தேதி ஒரே நேரத்தில் தபால், மின்னணு வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு துவங்கும் என தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
*ஊரடங்கால் இரவு 9 மணியுடன் கடைகள் மூடப்படும் என அறிவிப்பு. முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே மதுபானம் வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
*கொரோனா 2ஆம் அலை பரவுவதால் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்விற்கு அனுமதி வழங்க முடியாது என மதுரை உயர்நீதிமனற கிளை உத்தரவு
*சென்னையில் மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்படுகிறது. காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு
*இந்தியாவை பயணத் தடைக்கான சிவப்பு பட்டியலில் சேர்த்தது இங்கிலாந்து அரசு. பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* ஐபிஎல் டி20: ராஜஸ்தான்அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிஎஸ்கே பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் நேற்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர்.
இது போன்ற அடுத்தடுத்த அப்டேட் செய்திகள் சுருக்கமாகவும், தெளிவாகவும் அடுத்து வரும் தலைப்பு செய்திகளில் இடம் பெறும்.