செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது அருகில் இருந்த இளைஞர் ஒருவரை பெண் செய்தியாளர் கண்ணத்தில் அறைந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


பாகிஸ்தானின் லூகூரில் பெண் செய்தியாளர் ஒருவர் பக்ரீத் தினத்தை முன்னிட்டு செய்திகள் வழங்கிக் கொண்டிருந்தார் பெண் செய்தியாளர் ஒருவர். அவர் பேசி முடித்தவுடன் திடீரென்று தன் அருகில் நின்று கொண்டிருந்த இளைஞரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த காட்சிகள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த வீடியோவை சுமார் 4.78 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக தகவல்கள் அந்த வீடியோவில் குறிப்பிடப்படாத நிலையில் அந்த பெண் செய்தியாளருக்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.







ஆதரவாக பேசியுள்ள சிலர், அந்த பெண் அறைந்தது சரிதான். அந்த நபர் நிச்சயம் தவறு செய்திருக்க வேண்டும் அதனால் தான் அந்த செய்தியாளர் அறைகிறார் என்று எழுதியிருந்தனர். இல்லை, ஒருவரை காரணம் இல்லாமல் இல்லாமல் அடிக்கக் கூடாது. அந்த இளைஞரை அடித்தது தவறு அப்பெண் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ஒரு சிலருமெ எழுதி வருகின்றனர்.


உமர் ஜகாங்கீர் என்ற நபர் “செய்தி வழங்கிக் கொண்டிருந்தபோது இளைஞரை அந்த பெண் அறைந்தது முற்றிலும் அவமானகரமானது மற்றும் எந்தவொரு உறுதியான காரணமும் இல்லாமல் ஒரு சிறியவரை கேமராவில் அறைவதற்கு அவளுக்கு எந்த உரிமையும் இல்லை, அதன் பிறகு அவள் அளித்த விளக்கம் உண்மையிலேயே  நம்பமுடியாதது என்று கூறியுள்ளார்.






அந்த நபரை கன்னத்திலேயே அறைந்தது லாகூர் நியூஸ் செய்தித் தொலைக்காட்சியின் செய்தியாளர் மைரா ஹாஸ்மி என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் “வேலை செய்துகொண்டிருக்கும்போது இடையூறு செய்வது மிகவும் வெறுக்கத்தக்கது. இந்த காட்சிகள் கேமராவில் பதிவாகும் என்று எனக்குத் தெரியாது பேட்டியின் போது குடும்பத்தை தொந்தரவுசெய்து கொண்டிருந்தான். ஒரு குடும்பத்தை கலங்க வைத்தான். அப்படி செய்ய வேண்டாம் என்று அன்பாகதான் முதலில் விளக்கினேன். விளக்கியும் புரியாமல் மேலும் மேலும் வம்பு செய்தான். அந்த செயல் எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் நான் அப்படி செய்துவிட்டேன்” என்று விளக்கமளித்துள்ளார்.




அந்த பதிவானது ஃபேஸ்புக்கில் 129 பேராஜ் ஷேர் செய்யப்பட்டுள்ளது, அதோடு 364 பேர் அப்பெண்ணின் பதிவில் கருத்து தெரிவித்துள்ளனர். செய்தி சேகரிகச் சென்றப் பெண் இளைஞரின் கன்னத்தில் பளார்விட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.