அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காரிலிருந்து மீட்கப்படும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
வெள்ளத்தில் காருடன் சிக்கிய பெண்
முன்னதாக இச்சம்பவம் குறித்து அரிசோனாவின் அப்பாச்சி சந்திப்பு காவல் துறையினர் வெளியிட்டுள்ள பதிவில், ”கடந்த ஜூலை 28ஆம் தேதி வெள்ள பாதிப்புகள் குறித்து தொடர்ந்து பல அழைப்புகள் அரிசோனாவின் அப்பாச்சி காவல் துறையினருக்கு வந்துள்ளது.
”வீக்ஸ் வாஷ் எனப்படும் பகுதியில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த வாகன ஓட்டியை காப்பாற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் பலத்த நீரோட்டத்தில் தத்தளிக்கும் பெண், அவருடன் காவலர்கள் பேச்சுக் கொடுக்க முற்படுவது, தொடர்ந்து வெளியேற முய்ற்சித்தும் முடியாத அப்பெண்ணை காவலர்கள் முழுமுயற்சியுடன் வெளியே இழுத்து காப்பாற்றுவது என அனைத்தும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து காரில் இருந்த அப்பெண்ணின் செல்ல நாயை காப்பாற்ற முயன்ற நிலையில், இறுதியில் மீட்க முடியாமல் நாய் அடித்துச் செல்லப்பட்டது. எனினும் அப்பெண்ணின் குடும்பத்தாரின் கோரிக்கைக்கு ஏற்ப நாயைத் தொடர்ந்து தேடி வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதுபோன்ற மழைக் காலங்களில் கவனமாக வண்டி ஓட்டுவது குறித்து காவல் துறையினர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த ரயில், ஆற்றில் குதித்த பெண்
இதேபோல் முன்னதாக அமெரிக்காவின் போஸ்டன் நகரில் தீப்பிடித்து எரியும் ரயிலில் இருந்து பெண் ஒருவர் குதிக்கும் வீடியோ, வைரலானது.
200 பயணிகளைத் தாங்கியபடி பயணித்த இந்த ரயில் மாசாசூட்ஸ் மாநிலத்தின் மிஸ்டிக் ஆற்றின் மீது பயணித்த நிலையில், ரயில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. அப்போது ரயிலில் பயணித்த பெண்களில் அரண்ட பெண் ஒருவர் ரயிலில் இருந்து பெண் ஒருவர் ஆற்றில் குதித்தார்.
தொடர்ந்து அப்பெண் எந்த காயங்களுமின்றி தொடர்ந்து மீட்கப்பட்டார். மேலும் ரயிலில் இருந்த பிற பயணிகளும் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.