சீனாவின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தைவான் வந்தடைந்தார்  அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி .போர் விமானங்களை பறக்கவிட்டு பயம் காட்டிய சீன அரசு.


தைவான் :


இரண்டாம் உலக போருக்கு பின்னர் ஏற்பட்ட  1949 ஆம் ஆண்டு உள்ளூர் போரில் சீனாவில் இருந்து தைவான் பிரிந்து தனி இறையான்மை நாடாக உள்ளது. ஆனால் பிரிந்த நாள் முதலே தைவான் சீனாவிற்கு சொந்தமானது என சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தாங்கள் எந்த நாட்டிற்கும் சொந்தமானவர்கள் இல்லை , எங்கள் நாடு தனித்த நாடு என தொடர்ந்து தைவானும் போர்க்கொடி பிடித்து வருகிறது. ஆனாலும் அவ்வபோது சீனா தைவான் எல்லைக்குள் போர்படைகளை அனுப்பி பயம் காட்டி வருவது நாம் அறிந்ததுதான். ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்னால்  சீனாவின்  சீண்டல்கள் சற்று அதிகமாகியிருக்கிறது எனலாம்.






நான்சி பெலோசி :


அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் வருகை ஏப்ரல் மாதம் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் திட்டம் தள்ளிவைக்கப்பட்டது. ஆரம்பம் முதலே சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஆனால் பல எதிர்ப்புகளையும் மீறி நான்சி தற்போது தைவான் வந்தடைந்துள்ளார். SPAR19 தனி விமானம் மூலம் வான்வழி பாதுகாப்புடன் தைவானின் தைபே விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அவர் எல்லையை நோக்கி நகரும் பொழுது சீன போர் படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. அதே போல பதிலடி கொடுப்பதற்காக  தைவான் படைகளும் தயாரகவே இருந்தன. மேலும் 13 அமெரிக்க பாதுகாப்பு போர் விமானங்கள் தைபே நோக்கி பறந்தன.



பயம் காட்டும் சீனா :


நான்சி பெலாசி தைபே வந்திறங்கியதும் அந்நாட்டின் முக்கிய தலைவர்கள் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர். ஆனாலும் பதற்றம் தணிந்த பாடில்லை.  ஏனென்றால் பெலாசி வந்திறங்கிய சில மணி நேரத்திற்குள் தைவான் வான் எல்லைக்குள் 21 சீன் போர் விமானங்கள் பறந்தன.  இதோடு தைவான் எல்லைக்குள் நாளை முதல் (வியாழன் ) வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட இராணுவ பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என சீனா வேண்டுமென்றே அறிவித்துள்ளது. இதனால் சீனா - தைவான் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தைவானில் நீர் நிலைகளிலும் போர் கப்பல்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.