முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் லண்டன் சென்றபோது, இரண்டாம் எலிசபெத் ராணியின் தேநீர் விருந்தினைத் தவிர்த்ததோடு மட்டுமில்லாமல் இந்தியர்களின்  தேநீரைத் தேடி, ஆர்டர் செய்ததாகவும், ஒரு சுற்றுலாப்பயணியைஒபோல லண்டனை அனுபவிக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது.


கடல் கடந்தும் இந்தியர்களின் உணவின் மீதான மவுசு குறையவில்லை. வரலாற்று ஆவணங்களை திருப்பிப்பார்த்தால் கொஞ்சம் வியப்பாகத்தான் உள்ளது.  இரண்டாம் எலிசபெத் ராணியின் தேநீர் விருந்தினைக்கூட புறக்கணித்து இந்தியர்களின் உணவினைத் தேடி அழைந்துள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒருவர். யார் அவர்? என்ன தான் நடந்தது? அவர்களது சந்திப்பில்..


அரண்மனையில் ராணிடன் தேநீர் அருந்தும் மரியாதையை யார் மறுப்பார்கள்? எப்படியாவது ஒரு நாளைக்காவது அரண்மனையில் விருந்தில் கலந்துகொண்டாக வேண்டும் என்று நினைக்கும் பிரபலங்களுக்கு மத்தியல் அதற்கு சற்று மாறுதலாக நடந்துள்ளார் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன்.  கடந்த 1997-ஆம் ஆண்டு  இங்கிலாந்தில் டேனி பிளேர் முதன் முதலில் பதவி ஏற்ற சமயத்தில் அவரை சந்திக்க பில் கிளிண்டன்  லண்டன் சென்றுள்ளார். அப்பொழுதுதான், லண்டன் வந்திருந்த முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் குடும்பத்தினரை தேநீர் விருந்திற்கு வர வேண்டும் என பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து ஊழியர் ஒருவர் தகவல் கொடுக்க வந்துள்ளார். ஆனால் பில் கிளிண்டனோ அழைப்பினை மறுத்துவிட்டார் என தேசிய ஆவணக்காப்பகத்தில் இருந்து வெளியான புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது



ஏன் இரண்டாம் எலிசபெத் ராணியின் தேநீர் விருந்தினை மறுத்தார் என்று அறிய முயன்றால் அதில் சுவாரஸ்சிமான விஷயங்கள் ஒளிந்திருக்கின்றன.  முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஒரு சுற்றுலாப்பயணி போல உலாவரவேண்டும் எனவும், அவற்றுடன் இந்தியர்களின் உணவினை உட்கொள்ளவேண்டும் என்று நினைத்தாகவும் கூறப்படுகிறது.  மேலும் அப்போதைய டோனி பிளேரின் தனிச்செயலாளராக பிலிப் பார்டன், கிளிண்டன் அரசு சலுகையினை பணிவுடன் நிராகரிக்கிறார் எனவும், பிரதமரின் இல்லத்தில் இரவு உணவினை உண்பதற்கு கூட அவர் ஆர்வம் காட்டவில்லை என பக்கிங்ஹாம் அரண்மனைக்கு தகவல் கொடுத்துள்ளார்.


இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர் இந்திய உணவகத்தினை தேடி அலைந்தும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து ஒரு பிரெஞ்ச் உணவகத்தில் அவர்கள் குடும்பத்துடன் சாப்பிட்டு மகிழ்ந்ததாய் ஆவணங்கள் கூறுகின்றன. இதுத்தொடர்பான புகைப்படங்களும் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.



இந்தியர்களின் உணவினை தேடி அலைந்த பில் கிளிண்டன் கடைசியில் பிரெஞ்ச் உணவுதான் கிடைத்தது என்று பிரதமர் டோனி பிளேரின் செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.  முன்னதாக 1994-ஆம் ஆண்டில்  50-வது ஆண்டு விழாவிலும், 1995 இல் பக்கிங்ஹாம் அரண்மனையில் தேநீர்  விருந்தில் பில் கிளிண்டன் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த 1997-ஆம் ஆண்டு டேனி பிளேரை சந்திக்க வந்தபொழுது தான் இந்தியர்களின் உணவினைத் தேடி அலைந்ததாக ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.