வெளிநாட்டினர் மத்தியில் தற்போது விண்வெளி பயணம் என்பது ஒரு வாடிக்கையாக அமைந்துள்ளது. அண்மையில் கடந்த 11ஆம் தேதி பிரிட்டன் தொழிலதிபர் ரிச்சர்ட் பிரான்சென் தன்னுடைய விர்ஜின் கெலக்டிக் ராக்கெட் மூலம் மெக்சிகோ பாலைவனத்தில் இருந்து 53 மையில்(86 கிலோ மீட்டர்) தூரத்தில் விண்வெளியில் பறந்து இருந்தார். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது உலகின் நம்பர் ஒன் பணக்காரரான  ஜெஃப் பெசோஸ் விண்வெளி பயணம் சென்று திரும்பியுள்ளார். 


இதற்காக அவருடயை ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் தயாரித்த நியூ ஸ்பேர்டு ராக்கெட் கேப்சூல் மூலம் விண்வெளிக்கு சென்று வந்துள்ளார். அவருடன் சேர்ந்து அவர் சகோதரர் மார்க் பெசோஸ், 82 வயது பைலெட் வேலி ஃபன்க், 18 வயதான ஆலிவர் டெமேன் ஆகியோர் பயணம் செய்தனர்.  பெசோஸ் உடன் பயணம் செய்த வேலி ஃபன்க் விண்வெளிக்கு பயணம் செய்த வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் 18 வயதான ஆலிவர் டெமேன் விண்வெளிக்கு பயணம் செய்த இளம் வயது நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.  இவர்கள் அனைவரும் 10 நிமிடங்கள் 20 விநாடிகள் விண்வெளியில் பயணம் செய்து பிறகு கேப்சூல் உதவியுடன் கீழே இறங்கினர்.


 






நியூ ஸ்பேர்டு ராக்கெட்:


ப்ளூ ஆர்ஜினின் நியூ ஸ்பேர்டு ராக்கெட் மேற்கு டேக்சாஸ் பகுதியில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. இந்த ராக்கெட் சுமார் 66.7 மையில் தூரத்திற்கு பறந்தது. அதாவது பூமியிலிருந்து 107 கீலோ மீட்டர் தூரம் வரை பறந்து திரும்பியது.  இந்த ராக்கெட் மணிக்கு 3540 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் 18.3 மீட்டர் உயரம் கொண்டது. இதை முழுவதும் கணினி மூலம் தான் இயக்க முடியும். இதற்கு என்று தனியாக விமானி என்று யாரும் தேவையில்லை. 




 இந்தப் பயணத்தின் முக்கியத்துவம்?


கடந்த வாரம் பிரான்சென் விண்வெளி பயணம் மேற்கொண்ட பிறகு தற்போது ஜெஃப் பெசோஸூம் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார். இதன்மூலம் விரைவில் விண்வெளி சுற்றுலா ஒரு எளிமையான விஷயமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டு விண்வெளி சுற்றுலாவை மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோகத்தில் ஜெஃப் பெசோஸ் ப்ளூ ஆர்ஜின் என்ற நிறுவனத்தை தொடங்கினார். 




இந்த நிறுவனம் விண்வெளிக்கு மக்களை அழைத்து செல்ல தேவையான வகையில் ராக்கெட் மற்றும் திரும்பி பூமிக்கு வர உதவும் கேப்சூல் ஆகியவற்றை தயாரித்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த நிறுவனம் தயாரித்த ராக்கெட் மற்றும் கேப்சூல் முதல் முறையாக விண்வெளி பயணம் சென்று வந்துள்ளது. விண்வெளி சுற்றுலாவில் ஜெஃப் பெசோஸ், பிரான்சென் மற்றும் எலோன் மஸ்க் ஆகிய மூவரும் போட்டி போட்டு கொண்டு வருகின்றனர். இவர்களை போல் எலோன் மஸ்க் நிறுவனமாக ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி சுற்றுலாவில் விரைவில் கால்பதிக்க உள்ளது. 


ப்ளூ ஆர்ஜின் மூலம் எப்படி விண்வெளி சுற்றுலா செல்ல முடியும்?


இந்த ராக்கெட் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா செல்ல விரும்புவர்கள் டிக்கெட்டிற்கு ஏலம் எடுக்க வேண்டும். சமீபத்தில் நடத்தப்பட்ட இந்த டிக்கெட் ஏலத்தில் ஒரு டிக்கெட்டை ஒருவர் 29 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். அவர் ப்ளூ ஆர்ஜின் ராக்கெட்டின் அடுத்த விண்வெளி பயணத்தில் செல்ல உள்ளார். இந்த ஏலம் மூலமாகவே விண்வெளிக்கு செல்ல போகும் மூவர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பட்ஜெட் விலையில் 5ஜி மொபைல் வாங்குற பிளான் இருக்கா? அப்போ ஜூலை 26 வரை காத்திருங்க!