ஆப்பிரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாகப் புகார் எழுந்ததை அடுத்து, குரங்கம்மையை இனி எம். பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.


டென்மார்க்கில் 1958-ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒரு வித வைரசால் பாதிப்புக்குள்ளானது. இதனால் அந்த வைரஸ் நோய்க்கு குரங்கு அம்மை என பெயர் வந்தது. 


இந்நிலையில், இந்த வைரஸ் மனிதர்களுக்கும் பரவியது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம் பாக்ஸ் என மாற்றியுள்ளது. உலகளாவிய மருத்துவ நிபுணர்களின் தொடர்ச்சியான ஆலோசனையை தொடர்ந்து இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.






குரங்கு அம்மை


குரங்கு அம்மை என்பது ஒரு வைரஸ் ஜூனோசிஸ் (விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் வைரஸ்) ஆகும். இது மருத்துவரீதியாக குறைவான தீவிரத்தன்மை கொண்டதாக இருந்தாலும், சின்னம்மை நோயாளிகளிடம் காணப்பட்ட அறிகுறிகளைப் கொண்டுள்ளது.


நோய்களின் அறிகுறிகள் வெளிப்படும் விதத்தில் வித்தியாசம் இருப்பதாக மருத்துவர்கள் வலியுறுத்தினாலும், சரும அறிகுறி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான அறிகுறிகளால் மக்களிடையே குழப்பம் ஏற்படுத்தியுள்ளது.


மழைக்காலத்தில், மக்கள் வைரஸ் தொற்றுகளுக்கு அதிகமாக ஆளாகிறார்கள். சரும அறிகுறி மற்றும் குமட்டல் போன்ற அறிகுறிகளுடன், மற்ற நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து சின்னம்மைக்கான அறிகுறிகளை காட்டுகின்றன.


Girl Eat Hair: 14 வயது சிறுமி வயிற்றில் 3 கிலோ முடி..! சாப்பாடு போக கூட இடமில்ல..! அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்


குரங்கு அம்மை பொதுவாக காய்ச்சல், உடல்நலக்குறைவு, தலைவலி, சில சமயங்களில் தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இந்த அனைத்து அறிகுறிகளும் சரும சிவப்பாகுதல் போன்ற பிற பிரச்சனைகளுக்கு, நான்கு நாட்களுக்கு முன்பே தோன்றும். கண் மற்றும் வாய் பகுதியிலிருந்து தொடங்கி, உடல் முழுவதும் பரவுகிறது.


தமிழ்நாட்டில் அறிகுறி
முன்னதாக, கன்னியாகுமரியைச் சேர்ந்த 4 பேருக்கும், புதுக்கோட்டையில் இருந்து வந்த ஒருவருக்கும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர்.


உலகம் முழுவதும் 75 நாடுகளில் 16,000க்கும் மேற்பட்டோர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக உலகம் முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், குரங்கம்மை பரவலை எச்சரிக்கை மணியாக கருத வேண்டும் என தெரிவித்திருந்தார். 


"பெரியம்மை தடுப்பூசி திட்டங்கள் 1979-1980 முதல் நிறுத்தப்பட்டன. பெரியம்மை தடுப்பூசிகள் குரங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த ஆண்டு, ஐரோப்பிய மருத்துவ சங்கம் பெரியம்மைக்காக உருவாக்கப்பட்ட ’டெகோவிரிமாட்’ எனப்படும் வைரஸ் தடுப்பு மருந்துக்கு உரிமம் வழங்கியுள்ளது.


சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) உள்ளிட்ட இந்திய மருந்து நிறுவனங்கள், தற்போதுள்ள பெரியம்மை தடுப்பூசி அவர்களுக்கு பரவலாகக் கிடைத்தால், அதை சந்தைப்படுத்தி விநியோகம் செய்வதில் பங்கு வகிக்க முடியும்.


தொற்றுநோய்க்கான தயார்நிலையைப் பற்றி தொடர்ந்து பேசி வருகிறோம். விஷயம் என்னவென்றால், உற்பத்தியை எவ்வளவு விரைவாக பெருக்க முடியும் என்பதுதான். இந்தியாவின் திறன் காரணமாக அவர்கள் மிக முக்கிய பங்கை வகிப்பார்கள்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.