உலகில் பெரும்பாலான மனிதர்களுக்கு வினோதமான பழக்கங்கள் இருப்பது வழக்கம். சீனாவில் ஒரு இளம் பெண்ணுக்கு ஏற்பட்ட வினோத பழக்கம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


14 வயது சிறுமி:


சீனாவில் அமைந்துள்ளது ஷாங்சி. இங்குள்ள ஷியான் கிராமத்தில் வசித்து வரும் 14 வயது சிறுமிக்கு உணவு சாப்பிடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த சிறுமி சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்த காரணத்தால், அந்த சிறுமியின் பெற்றோர்கள் அந்த சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.




அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமிக்கு ஸ்கேன் செய்தனர். அப்போது, சிறுமியின் வயிற்றில் உருண்டையாக ஏதோ இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து, சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அப்போது, சிறுமியின் வயிற்றில் உருண்டையாக தலைமுடி இருந்துள்ளது. இதைக்கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அந்த முடியை அகற்ற, அகற்ற வந்து கொண்டே இருந்துள்ளது.  


3 கிலோ முடி:


அறுவை சிகிச்சையின் இறுதியில் அந்த பெண்ணின் வயிற்றில் இருந்து 3 கிலோ முடியை மருத்துவர்கள் முழுவதும் அகற்றினர். 14 வயது சிறுமி வயிற்றில் 3 கிலோ முடி இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை அப்பகுதி முழுவதும் ஏற்படுத்தியது. தனது தலைமுடியை பிய்த்து தானே சாப்பிடும் பிகா எனப்படும் வினோத நோயால் அந்த சிறுமி பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால், சிறுமியின் தலை வழுக்கை விழும் நிலையில் காணப்படுகிறது.




அந்த சிறுமியின் வயிற்றில் இருந்த 3 கிலோ முடி காரணமாக அந்த சிறுமி வயிற்றில் உணவு செல்வதற்கு இடமில்லாமல் இருந்துள்ளது. இதன் காரணமாகவே, அந்த சிறுமி சாப்பிட முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அமெரிக்காவில் இதேபோன்று 2017ம் ஆண்டு 16 வயது சிறுமி வயிற்றின் உள்ளே முடி உருண்டை இருந்த காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க:Watch Video: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தங்கையை காரோடு கட்டித்தூக்கிய தெலங்கானா போலீஸ்... அரசியலில் பரபரப்பு!


மேலும் படிக்க: CTET 2022: மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம்; டிச.3 வரை திருத்தங்கள் செய்யலாம்; எப்படி?- விவரம்