சிங்கப்பூர் தேர்தல்:


வருகிற செப்டம்பர் 13ஆம் தேதியுடன், சிங்கப்பூர் அதிபராக பதவி வகித்து வரும் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், சிங்கப்பூர் அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் விலகியுள்ளார். தமிழரான தர்மனை தவிர, நாட்டின் ஒன்பதாவது அதிபரை தேர்வு செய்ய உள்ள தேர்தலில் மேலும் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சிங்கப்பூர் அரசாங்க முதலீட்டு நிறுவனத்தின் (GIC) முன்னாள் தலைமை முதலீட்டு அதிகாரி எங் கோக் சாங், NTUC இன்கம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டான் கின் லியான் ஆகியோர் தேர்தல் களத்தில் இருந்தனர். இந்த தேர்தலில், இந்திய வம்சாவளி தமிழரான தர்மன் சண்முகரத்னம் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் 70.4 சதவீத வாக்குகள் பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றதாக தேர்தல் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 


யார் இந்த தர்மர்?



  • அரசியல் வாழ்க்கை:


உலக அளவில் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் தமிழர்கள், தற்போது பல நாடுகளில் அரசியலிலும் ஆளுமை செலுத்தி வருகின்றனர். அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் மற்றும்  இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் போன்றோர் பதவி வகித்து வரும் நிலையில், தற்போது தமிழர்களுக்கு மிகவும் நெருங்கிய நாடான சிங்கப்பூரின் அதிபர் தேர்தலுக்கு தமிழரான தர்மன் சண்முகரத்னம் களமிறங்கி உள்ளார்.  தமிழர்களுக்கு மேலும் பெருமைசேர்க்க இருக்கும் யார் இந்த தர்மன் சண்முகரத்னம் என்பதை பார்க்கலாம்.


நம் அண்டை நாடான இலங்கையை பூர்விகமாக கொண்ட தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் தர்மன் சண்முகரத்னம். இவரது வயது 68 ஆகும்.  2011 முதல் சிங்கப்பூர் நாணய வாரியத்தின் தலைவராக பணியாற்றி வருபவர். சிங்கப்பூரின் அரசாங்க முதலீட்டு நிறுவனமான இறையான்மை செல்வ நிதியின் துணைத்தலைவர், பொருளியில் வளர்ச்சி கழகத்தின் ஆலோசனை மன்ற தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 2019ஆம் ஆண்டு மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்த தர்மன், பொருளியல் கொள்கைளை வகுப்பதில் பிரதமருக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.


ஜூரோங் தொகுதியில் இருந்து இதுவரை நான்கு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது 66 வயதான தர்மன் சண்முகரத்னம் தனது 22 ஆண்டுகால அரசியல் பயணத்தில் சிங்கப்பூரின் பிரதமராகவும், நிதி அமைச்சராகவும், கல்வி அமைச்சராகவும், சமூதாய கொள்கைகளுக்கான  ஒருங்கிணைப்பு அமைச்சராகவும்  பதவி வகித்து வந்தார். இன்று அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததோடு, மக்கள்  செயல் கட்சியில் இருந்தும் விலகி உள்ளார். தர்மனின் விலகல் கட்சிக்கும், அமைச்சரவைக்கு பேரிழப்பு என சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்திருந்தார்.  




  • வாழ்க்கை மற்றும் கல்வி




66 வயதான தர்மன் சண்முகரத்னம் 1957ஆம் ஆண்டு பிறந்தார்.  இவரது மனைவி ஜேன் யுமிகோ இட்டோகி. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். சிங்கப்பூரில் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையில் முடித்தார். லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் இளங்களை பொருளியில் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலை பொளியல் பட்டமும் பெற்றார்.  பின்பு, சிங்கப்பூரின் நாணய ஆணையத்தில் தனது பணியை தொடங்கினார். அங்கு தலைமைப் பொருளாதார நிபுணர் ஆனார்.  இதனை தொடர்ந்த 2001ஆம் ஆண்டு மக்கள் செயல் கட்சி சார்பில்  போட்டியிட்டு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.