White House on Trump Speech: ட்ரம்ப் அந்த அர்த்தத்துல சொல்லலைங்கோ.! ஜகா வாங்கிய வெள்ளை மாளிகை...
அடடா, அவர் சொன்னத நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. அவர் அந்த அர்த்ததுல சொல்லல, அப்படீன்னு, காசா தொடர்பா ட்ரம்ப் பேசுனதுக்கு, வெள்ளை மாளிகை விளக்கம் கொடுத்துருக்கு.

காசா பகுதிகள கைப்பற்றப்போறதா ட்ரம்ப் நேத்து(05.02.25) அறிவிப்பு வெளியிட்ட நிலையில, அவர் அந்த அர்த்தத்துல சொல்லலைன்னு வெள்ளை மாளிகை விளக்கம் அளிச்சுருக்கு. அது என்ன விளக்கம்னு பார்க்கலாம் வாங்க.
காசா குறித்து ட்ரம்ப் பேச்சு
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் போன இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, வெள்ளை மாளிகைல அமெரிக்க அதிபர் ட்ரம்ப்ப சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாரு. அதுக்கு அப்புறம், ரெண்டு பேரும் கூட்டா செய்தியாளர்கள சந்திச்சாங்க. அப்போ பேசின அமெரிக்க அதிபர் ட்ரம்ப், காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போறதா அறிவிச்சார். அப்பகுதியில இருக்கற பாலஸ்தீனியர்கள், எகிப்து, ஜோர்டான் போன்ற பிற மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகணும்னு அவர் ஆலோசனை சொன்னார். அதோட, அங்க இருக்கற பாலஸ்தீனியர்கள் வேறு இடங்கள்ல குடியேறின பிறகு, அந்த இடத்தை சொந்தமாக்கி மேம்படுத்துவோம்னு அதிரடி காட்டினார் ட்ரம்ப். அங்க இருக்கற வெடிக்காத குண்டுகள், கட்டிட இடிபாடுகள அகற்றி, அந்த பகுதிய மேம்படுத்தி, பொருளாதாரத்த உயர்த்தி, மக்களுக்கு வீடு, வேலை வாய்ப்பு வசதிகளை செய்து கொடுக்க போறதாவும் அவர் சொன்னார்.
ஜகா வாங்கிய வெள்ளை மாளிகை
காசா பத்தின ட்ரம்ப்போட இந்த பேச்சு பெரும் சர்ச்சைக்குள்ளான நிலையில், உடனடியா வெள்ளை மாளிகையோட செய்தித் தொடர்பாளர் கரோலின் லீயவிட் அதுக்கு விளக்கம் அளிச்சுருக்காங்க. காசாவுல கால் பதிக்கறதுக்கு ட்ரம்ப் உறுதி அளிக்கலைன்னும், காசாவ மறுபடியும் கட்டியெழுப்பறதுக்கு அமெரிக்கா பணம் கொடுக்கப் போறதில்லைன்னும் அவங்க சொல்லியிருக்காங்க. அதோட, அந்த பிராந்தியத்த புனரமைக்கறதுக்கு, அங்க இருக்கற நிர்வாகத்தினர் கூட இணைஞ்சு பணியாற்ற உள்ளதாகவும், இது ட்ரம்ப்போட தனித்துவமான யோசனைன்னும் விளக்கமளிச்சுருக்காங்க. அந்த பிராந்தியத்துல இருக்கற எல்லா மக்களும், மத்திய கிழக்குல நீடித்த அமைதியும் என்பதுதான் ட்ரம்ப்போட குறிக்கோள் அப்படீன்னு கரோலின் சொல்லியிருக்காங்க.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்
இதே மாதிரி, நேத்து நடந்த நிகழ்ச்சி ஒண்ணுல பங்கேற்ற அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும், ட்ரம்ப்போட பேச்ச பத்தி ஒரு விளக்கம் கொடுத்துருக்கார். காசாவோட புனரமைப்புக்கு மட்டுமே பொறுப்பேற்கறதா ட்ரம்ப் சொன்னதாவும், காசா பகுதிய காலவரையற்ற உடைமைன்னு சொல்லலைன்னும், ட்ரம்ப்போட முன்மொழிவு விரோதமானது இல்லைன்னும் சொல்லியிருக்கார்.
என்னோட பார்வைல, அமெரிக்கா, காசா பகுதிக்கு போய், அங்க இருக்கற இடிபாடுகள அகற்றி, அந்த பகுதிகள்ல மக்கள் மறுபடியும் குடியேறும் விதமா சுத்தம் செய்யுறத பத்திதான் ட்ரம்ப் பேசியிருக்கார்னு, மார்கோ ரூபியோ சொல்லியிருக்கார்.
எப்படியோ, அதிரடியா கெத்து காட்டுன ட்ரம்ப்ப, வெள்ளை மாளிகை முட்டுக்கொடுத்து காப்பாத்தியிருக்குன்னுதான் சொல்லணும்.