Largest Number Of Roads: உலகிலேயே அதிக சாலைகளை கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியாவின் நிலை பற்றிய விவரங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.


உலக சாலை வசதிகள்:


உலகில் சாலை நெட்வொர்க் எவ்வளவு பரவலாக இருக்கும் என கேட்பது, நிச்சயம் ஒரு சுவாரஸ்யமான கேள்வியாக இருகும். போக்குவரத்துக்கு மட்டுமின்றி ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும் , பொருளாதார நடவடிக்கைகளுக்கும் சாலைகள் முக்கியப் பங்காற்றுகின்றன . இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகில் எந்த நாட்டில் அதிக சாலைகள் உள்ளன என்பதையும், இந்த விஷயத்தில் இந்தியாவின் நிலை என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் .


உலக சாலை நெட்வொர்க்


உலகின் பல்வேறு நாடுகளில் சாலைகளின் அடர்த்தி மற்றும் நீளம் வேறுபட்டது. இது நாட்டின் அளவு, புவியியல் இருப்பிடம், மக்கள் தொகை , பொருளாதார வளர்ச்சி, தேவை மற்றும் அரசின் கொள்கைகள் போன்ற பல காரணிகளைப் பொறுத்தது .


எந்த நாட்டில் அதிக சாலைகள் உள்ளன ?


அமெரிக்கா: உலகிலேயே மிகப்பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்படுகிறது. அந்நாட்டில் 4 மில்லியன் மைல்களுக்கும் அதிகமான சாலைகள் உள்ளன, பெரும்பாலும் அந்நாட்டின் கிராமப்புறங்களில் இருவழிச் சாலைகள் உள்ளன. அதன் பரந்த நிலப்பரப்பும் வளர்ந்த போக்குவரத்து வலையமைப்பும் இதற்குச் சான்று.


இந்தியா: உலகிலேயே இரண்டாவது பெரிய சாலை நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் 66.7 லட்சம் கிலோமீட்டர் சாலை நெட்வொர்க் உள்ளது. இதில் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 145 கிலோ மீட்டர் தூரத்திற்கான சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள் ஆகும். 1,79,535 கிமீ தூரத்திற்கான சாலை மாநில நெடுஞ்சாலைகள் ஆகவும், 63,45,403 கிமீ தூரத்திற்கான சாலைகள் பிற சாலைகளாகவும் உள்ளன. நாட்டின் மிகப்பெரிய மக்கள்தொகை மற்றும் மாறுபட்ட புவியியல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது ஒரு பெரிய சாதனையாகும். 5 டிரில்லியன் மதிப்பிலான பொருளாதாரம் என்ற இலக்கை எட்ட, சாலை வசதி போன்ற உட்கட்டமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.


சீனா: சர்வதேச பொருளாதாரத்தில் சீனா வேகமாக வளர்ந்து வருகிறது மற்றும் அதன் சாலை வலையமைப்பும் தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. அதன்படி, சீனாவில்  51.9 லட்சம் கிலோமீட்டர்  சாலை நெட்வொர்க் உள்ளது .


பிரேசில்: பிரேசிலின் நிலப்பரப்பு மிகப் பெரியது மற்றும் அது மிகப்பெரிய சாலை வலையமைப்பைக் கொண்டுள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின்படி, பிரேசிலில் சாலை நெட்வொர்க் 20 லட்சம் கிலோமீட்டர்களுக்கு மேல் பரவியுள்ளது .


இந்தியாவில் சாலை நெட்வொர்க்:


இந்தியாவின் சாலை நெட்வொர்க் உலகின் மிகப்பெரிய சாலை கட்டமைப்புகளில் ஒன்றாகும். நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளிலும் , கிராமப்புற வளர்ச்சியிலும் , மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இருப்பினும், இந்தியாவில் பல சாலைகள் இன்னும் மோசமான நிலையில் உள்ளன . பெரிய நகரங்களில் போக்குவரத்து பிரச்சனை ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக சேதமடைந்த சாலைகளை சீர்படுத்தாதால் ஏற்படும் விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இன்னும் பல ஊர்கள் சாலை வசதியின்றி, நகரங்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் பின்தங்கியபடியே உள்ளன.