முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்


தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனை மற்றும் விநியோகத்தை தடுக்க காவல்துறை கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. கஞ்சா பயிரிடுவது தடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்தவர்களுக்கு சிறை தண்டனை மட்டுமின்றி, அவர்கள் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன- தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை


தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை - ஆளுநருக்கு குவியும் கண்டனம்


இந்தி மாத கொண்டாட்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் திராவிட நல்திருநாடு எனும் வரி விடப்பட்டதற்கு, ஆளுநர் ரவிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் ஆளுநர், தவறாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தை தடுத்து நிறுத்தாதது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.


வரலாறு காணாத உயர்வு கண்ட தங்கம் விலை


வரலாற்றில் முதன்முறையாக ஆபரண தங்கத்தின் விலை 58 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கம் விலை 320 ரூபாய் உயர்ந்து 58 ஆயிரத்து 240 ரூபாய்க்கும், ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை 2 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கார்த்திகை தீபம் - 40 லட்சம் பேர் திரள்வார்கள் என எதிர்பார்ப்பு


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இந்த ஆண்டு சுமார் 40 லட்சத்துக்கு மேற்பட்டோர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலப் பாதை, குடிநீர் வழங்கும் நிலையம், சுகாதார நிலையம் ஆகியவை அமைக்கும் பணிகள் விரைவில் நிறைவடையும். எவ்வித அசம்பாவிதமும் இல்லாத வகையில் இந்தாண்டு தீபத் திருவிழா சிறப்பாக நடைபெறும்" -  அமைச்சர் சேகர்பாபு


பொதிகை என இருந்த பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பா.ஜ.க. அரசுதான்' - எல்.முருகன்


சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி வார நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழ்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி வன்மத்தை கக்கும் விதமாக குற்றச்சாட்டு சுமத்திய தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன் - எல்.முருகன்


தொலைதூர படிப்புகளுக்கு கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் - யு.ஜி.சி. அறிவிப்பு


யு.ஜி.சி ஒழுங்குமுறை விதிகளின் அடிப்படையில் முழுமையான கட்டமைப்பு வசதிகளை கொண்ட உயர்கல்வி நிறுவனங்கள், தங்கள் கல்லூரிகளில் தொலைதூர, ஆன்லைன் வழியிலான படிப்புகளை கற்றுதர அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். https://deb.ugc.ac.in எனும், இணையதளம் வழியாக அக்டோபர் 31ம் தேதிக்குள் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.


மெதுவாக போகச் சொன்ன முதியவர் அடித்துக் கொலை


தெலங்கானாவில் சாலையை கடக்கும்போது வேகமாக சென்ற இருசக்கர வாகன ஓட்டியை மெதுவாக செல்லுமாறு முதியவர் ஆஞ்சநேயலு என்பவர் வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாகன ஓட்டி தாக்கியதில், காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


FBI-ஆல் தேடப்பட்டு வந்த விகாஸ் யாதவ் டெல்லியில் கைது


காலிஸ்தான் ஆதரவு தீகிரவாதியை கொலை செய்ய முயன்றதாக, இந்திய ரா அமிப்பின் முன்னாள் அதிகாரி விகாஷ் யாதவை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்காவின் எஃப்பிஐ அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்த குற்றச்சாட்டு வெளியான உடனேயே, டெல்லியில் விகாஷ் யாதவ் கைது செய்யப்பட்டு 4 மாதங்களுக்குப் பிறகு ஜாமினில் விடுவிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.


இந்திய அணி அதிரடியாக ரன் குவிப்பு


நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காவது நாளில், இந்திய அணி அதிரடியாக ரன் குவித்து வருகிறது. அடித்து ஆடிய சர்ஃப்ராஸ் கான் சதம் விளாசி அசத்தினார். மறுமுனையில் ரிஷப் பண்டும் அதிரடியாக ரன்களை குவித்து வருகிறார். இதனால், 10.40 மணியளவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களை சேர்த்துள்ளது.


மகளிர் டி20 உலகக் கோப்பை - தெ.ஆப்ரிக்கா Vs நியூசிலாந்து


மகளிர் டி20 உலகக் கோப்பையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வீழ்த்தியது. இதையடுத்து நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன.