போரால் பாதிக்கப்பட்டுள்ள லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருந்துகளை வழங்கி இந்தியா உதவி புரிந்துள்ளது. 


மேற்காசியாவில் ஹமாஸ் - இஸ்ரேலுக்கு இடையேயான போர் தொடங்கியதில் இருந்து இஸ்ரேலுக்கும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்திற்கும் இடையே தினசரி மோதல் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், லெபனானில் நடந்த பேஜர், வாக்கிடாக்கி உச்சக்கட்ட பதற்றத்தை உண்டாக்கியது.


இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்:


இதற்கு இஸ்ரேலே காரணம் என சொல்லப்படுகிறது. இதையடுத்து, லெபனானில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தின. இந்த நிலையில், ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் பாதுகாப்பு படை கொலை செய்துள்ளது.


வடக்கு இஸ்ரேலில் ராக்கெட்டுகளை ஏவி ஹிஸ்புல்லா இயக்கம் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஹிஸ்புல்லாவின் கோட்டையாக கருதப்படும் கிழக்கு மற்றும் தெற்கு லெபனானில் இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது.


நண்பனாக மாறிய இந்தியா:


நேற்று கூட தெற்கு லெபனானின் முக்கிய நகரமான நபாதியில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில், மேயர் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர். போரால் நிலைகுலைந்த லெபனானுக்கு இந்தியா மருத்துவ உதவிகளை அனுப்பியுள்ளது.


 






மொத்தம் 33 டன் மருத்துவப் பொருட்களை இந்தியா அனுப்ப இருக்கிறது. முதல் கட்டமாக 11 டன் மருத்துவப் பொருட்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டன. இதுதொடர்பான தகவலை இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


போருக்கு எதிராக இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே, உக்ரைல் - ரஷிய நாடுகளுக்கு இடையேயான போர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மத்திய கிழக்கில் நடந்து வரும் போர், உலக நாடுகளை அச்சம் கொள்ள செய்துள்ளது. 


இதையும் படிக்க: Worlds Longest Tunnel: உலகின் மிக நீளமான சுரங்கப்பாதை - 151 கிமீ நீளம், 250கிமீ வேகம், எந்த நாட்டில் இருக்கு தெரியுமா?