பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா அமைப்பின் (யுஎன்எப்சிசிசி) 26வது சிஓபி-26 மாநாடு நாளை தொடங்குகிறது. இதில், கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி கிளாஸ்கோ செல்லவுள்ளார். நவம்பர்  1ம் தேதி முதல் 2ம் தேதி வரை நடைபெறும் சிஓபி-26 உலக தலைவர்கள் உச்சிமாநாட்டில் 120 நாடுகளின் தலைவர்களுடன் கலந்துகொள்ளவுள்ளார்.


கிளாஸ்கோ உச்சி மாநாடு என்றால் என்ன?  


பருவநிலை மாற்றத்துக்கான ஐ.நா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் உச்சிமாநாடு சிஓபி 26. இந்த, பருவநிலை மாற்றம் குறித்த ஐ.நா-வின் பாரீஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா கட்டமைப்பு மாநாட்டில் குறிப்பிடப்பட்ட 8 இலக்குகளை 2021 முதல் 2030-க்குள் அடைவதற்கான உறுதி அறிக்கையை இந்தியா சமர்ப்பித்தது


இதன்படி 2005-ல் இருந்த மாசு அளவை விட,  2030ம் ஆண்டுக்குள், உள்நாட்டு மொத்த உற்பத்தி மூலம் ஏற்படும் மாசு அளவை  33 முதல் 35 சதவீதம் குறைக்க, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும் 40 சதவீத மின்சாரத்தை, படிமம் அல்லாத எரிபொருளில் இருந்து தயாரிக்கவும் இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. 


பாரிஸ் ஒப்பந்தம் என்றால் என்ன? 


1992ல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றுக் கொள்கை மாநாட்டில் பங்குபெற்ற பெரும்பான்மையான நாடுகளுடன் ஒப்புதலுடன் பசுமை வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் பொதுவான நடவடிக்கைகள் குறித்த உலகாளவிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பற்றது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய குறிப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படவில்லை.


வரும் நூற்றாண்டுக்குள் கரியமில வாயு மற்றும் பிற க்ரீன் ஹவுஸ் வாயுக்களின் உமிழ்வை அதிகளவு குறைத்து, புவி வெப்பமடைதல் 2 டிகிரி செல்சியஸ் அல்லது குறைந்தபட்சம் 1.5 டிகிரி அளவு கட்டாயம் குறைக்க வேண்டும் என்பது தான் பாரிஸ் ஒப்பந்தம். பருவநிலை வரலாற்றில் முதன் முறையாக ஒரு இலக்கு நிர்ணயித்து, அதனை அனைத்து நாடுகளும் நிறைவேற்ற இந்த ஒப்பந்தம் கட்டாயப்படுத்துகிறது. 


ஒவ்வொரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன? 


2015க்கு முந்தைய காலகட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த கியோட்டோ சர்வதேச உடன்படிக்கையின் கீழ்  (கியோட்டோ நெறிமுறை) உலக வெப்பமயமாதலை ஏற்படுத்தும் சில குறிப்பிட்ட பசுமை வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தில் தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளுக்கு மட்டுமே நிர்பந்தங்கங்கள் விதிக்கப்பட்டன. கியோட்டோ நெறிமுறைக்கு மாற்றாக வந்த பாரிஸ் ஒப்பந்தம் அனைத்து நாடுகளையும், அனைத்து வகையான க்ரீன் ஹவுஸ் வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளையும் உள்ளடக்குகிறது.              


இருப்பினும், இந்த பருவநிலை நடவடிக்கைகள், தேசிய அளவில் தீர்மானிக்கப்படுவதற்கான (Nationally Determined) சாத்தியக்கூறுகள் இந்த ஒப்பந்தத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், ஐந்தாண்டுக்கு ஒருமுறை இந்த தேசிய அளவிலான முடிவெடுக்கப்பட்ட பங்களிப்பை சமர்பிக்கப்பட வேண்டும். இந்தியா 2015, 2020ல் தனது தீர்மானத்தை சமர்பித்தது. இந்த தேசிய அளவிலான தீர்மானத்தை உறுப்பு அவ்வப்போது கண்காணித்து, ஆய்வு செய்வதற்கும் வழிவகை உள்ளது.            


மேலும், ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு மாநாடு (UNFCC) மற்றும் பாரிஸ் ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா, சீனா போன்ற  வளர்ந்து வரும் நாடுகளுக்கு பருவநிலை மாற்றத்துக்கான செயல்பாடுகளில் சில நெகிழ்வுத் தன்மை அளிக்கப்பட்டிருப்பதாகவும் (மாறுபட்ட பொறுப்பு, உரிய தனித்தன்மை- common but differentiated responsibilities (CBDR) ) பார்க்கப்படுகிறது. 


சிஓபி 26 என்ன செய்யப்போகிறது? 


கடந்த 2009-ஆம் ஆண்டு, க்ரீன் ஹவுஸ் வெளியேற்றத்தைக் குறைக்கும் வகையில் பின்தங்கிய நாடுகளுக்கு 2020-க்குள், ஆண்டுக்கு 100 பில்லியன் டாலர் அளிப்பதற்கான திட்டத்தினை வகுப்பதாக வளர்ந்த நாடுகள் உறுதிமொழிகள் அளித்து இருந்தன. ஆனால், இதுநாள் வரையில் இந்த உறுதி மொழிகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த, சிஓபி 26 மாநாட்டில் இதுகுறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்படுகிறது.     


மேலும், பாரிஸ் உடன்படுக்கையை அமல்படுத்துவதற்கான பொறிமுறைகள் கடந்த 2018-ஆம் ஆண்டில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் (COP-25) நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், Emissions Trading Markets போன்றவற்றிற்கான நெறிமுறைகள் தீர்மானிக்கப்படாமல் உள்ளன. இதில், ஒருமித்த கருத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தற்போது வரை பலனளிக்கவில்லை.          


பாரிஸ் ஒப்பந்தத் தடை நடைமுறைப்படுத்த இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் என்ன?  


பருவநிலை மாறுபாடுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட பாரிஸ் ஒப்பந்தத்தை இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்ததை நடைமுறைப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் துறை செயலர் தலைமையில் 14 அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளை, உறுப்பினர்களாக கொண்ட உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.  


பருவநிலை மாற்றங்களை எதிர்கொள்ள அவ்வப்போது இந்தியா மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இந்த விஷயத்தில் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து இந்த உயர்மட்ட குழு ஆய்வு செய்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்கும். 


COP-26 ஏன் முக்கியத்துவம் பெறுகிறது: காலநிலை மாற்றம் குறித்த சர்வதேச அரசாங்கக் குழுவின் (ஐபிசிசி) ஆறாவது மதிப்பீட்டு அறிக்கை சர்வதேச அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. வரும் ஆண்டுளில், இதே வழக்கமான நடைமுறைகளை உலக நாடுகள் பின்பற்றுமானால் புவி வெப்பமடைதல் 1.5 டிகிரி மற்றும் 2 டிகிரி செல்சியஸ் அளவை கட்டாயம் தாண்டும் என்று தெரிவித்தது.