வாடிகனில் போப் பிரான்சிஸ், பிரதமர் நரேந்திர மோடி இடையே சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின்போது, இந்தியாவுக்கு வர போப்பிற்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை போப் ஏற்றுக்கொண்டுள்ளார்.


ஜி20 மாநாட்டி கலந்துகொள்ள இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி வாடிகனில் போப் பிரான்சிசை சந்தித்து பேசினார். வாட்டிகன் அப்போஸ்தல அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிரதமர் மோடிக்கு கர்தினால்கள், தலைமை பேராயர்கள் வரவேற்பு அளித்தனர். பிரதமர் மோடி, போப் பிரான்சிஸ் இடையிலான சந்திப்பு ஒரு மணி நேரம் நீடித்தது. மெழுகுத்திரி தீபம் ஏற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட விளக்கை போப்பிற்கு பிரதமர் பரிசளித்தார். மேலும், பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த புத்தகத்தையும் பரிசாக வழங்கினார். போப் ஆண்டவரும், பிரதமர் மோடியும் பருவநிலை மாற்றம், வறுமையை அகற்றுவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.


இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘போப் பிரான்சிஸ் அவர்களுடன் மிகவும் அன்பான சந்திப்பு நடைபெற்றது. அவருடன் பலதரப்பட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மேலும் அவரை இந்தியாவுக்கு வருமாறும் அழைத்தேன்’ எனப் பதிவிட்டுள்ளார். 






இந்த நிலையில், போப் பிரான்சிஸ், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, இந்தியாவுக்கு வர ஆவலுடன் காத்திருக்கிறார் என்று வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ரோம் நகரில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.  20 நிமிடங்களுக்கு திட்டமிடப்பட்ட பிரதமர் மோடி மற்றும் போப் பிரான்சிஸ் இடையேயான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது எனவும் அவர் கூறினார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண