DeepSeek AI: சீனாவின் டீப்சீக்  செயலியால், அமெரிக்காவின் என்விடியா கிட்டத்தட்ட 600 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continues below advertisement

அதிகரிக்கும் AI ஆதிக்கம்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் AI  மனித இனத்திற்கே ஆபத்தாகலாம், வேலைவாய்ப்புகளை குறைக்கலாம் என பல எச்சரிக்கைகள் வெளியாகின்றன. ஆனாலும்,  கூகுள், மெட்டா மற்றும் OPEN AI போன்ற பல பெருநிறுவனங்கள் பெரும் முதலீடுகளை கொட்டி, AI தொடர்பான ஆராய்ச்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. அதன் விளைவாகதான் ஜெமினி மற்றும் சாட்ஜிபிடி போன்ற சாட் போட்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. இந்நிலையில், எந்தவித பெரிய பின்புலமும் இன்றி சீனாவில் மிகக் குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட DEEPSEEK R1 செயலி,  ஒட்டுமொத்த்த AI உலகையே ஆச்சரியத்திலும், கலக்கத்திலும் ஆழ்த்தியுள்ளது. காரணம், அமெரிக்காவில் OPEN AI நிறுவனத்தின் CHATGPT-யை பின்னுக்கு தள்ளி, ஆப்பிள் ஸ்டோரில் சிறந்த ரேட்டிங் பெற்ற இலவச செயலியாக முதலிடத்தை பிடித்துள்ளது.

டீப்சீக் AI என்றால் என்ன?

சீனாவின் டீப்சீக் நிறுவனம் கடந்த வாரம் ஒரு AI சாட்போட்டைஅறிமுகப்படுத்தியது. அமெரிக்க AI நிறுவனங்கள் பயன்படுத்தும் சிப்களை விட மிகவும் குறைவான தரம் கொண்ட சிப்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த சாட்போட் DeepSeek-V3 மாடலால் இயக்கப்படுகிறது. இருப்பினும் சாட்ஜிபிடியை காட்டிலும்,  அவுட்புட் தரமாக இருப்பதாக பயனர்கள் குறிப்பிடுகின்றனர். பயனர்கள் DeepSeek மற்றும் ChatGPT இடையே பல்வேறு செயல்திறன் சோதனைகளை நடத்தியுள்ளனர். அதன்படி, பல பிரிவுகளில் DeepSeek ChatGPT-ஐ விட சிறப்பாக செயல்படுவதாக கூறப்படுகிறது. சில மாதங்களில் தரம் குறைந்த சிப்களால் உருவாக்கப்பட்ட ஒரு AI எப்படி, பெரும் பொருட் செலவு மற்றும் நீண்ட உழைப்பால் உருவாக்கப்பட்ட CHATGPT-யின் அவுட்புட்டை மிஞ்சியது என்பதே தற்போது பலரின் காரணமாக உள்ளது.

Continues below advertisement

பயனர்களை கவர்ந்தது எப்படி?

DeepSeek சேவையானது AIME எனப்படும் செயற்கை நுண்ணறிவு மேலாண்மை அத்தியாவசியங்கள், MATH-500, மற்றும் GPQA அளவீடுகளில் சிறந்த செயல்திறனாளராக உள்ளது. நிரலாக்க அளவீடுகளில் ChatGPT சிறப்பானதாக இருந்தாலும், அந்த பிரிவிலும் DEEPSEEK தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது. API  (Artificial Intelligence Application Programming Interface) அனுபவம் பயனர்கள் கையாள எளிதாக உள்ளதாகவும், வரம்பு பிரச்சனைகள் இல்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கர்க நிறுவனங்கள் கலக்கம்:

AI தொழிற்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்காவின் குறைக்கடத்திகள் நிறுவனமான என்விடியாவின் பங்குகள், கிட்டத்தட்ட 17 சதவீதம் சரிந்து, அதன் சந்தை மதிப்பில் கிட்டத்தட்ட $600 பில்லியன்களை இழந்துள்ளது. சீன நிறுவன AI செயலியின் வளர்ச்சி தொடர்பாக பேசியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “இது நாம் விழித்துக்கொள்வதற்கான ஒரு அழைப்பு. எங்களாலும் அதை மலிவாக செய்ய முடிந்தால், எங்களாலும் அதே முடிவைப் பெற முடியும். இது எங்களுக்கு ஒரு நல்ல விஷயம் என்று நான் நினைக்கிறேன்” என பதிலளித்துள்ளார்.