Crime: என்னை தாக்கியவர் இவர்தான்.. 2 ஆண்டு கோமாவுக்கு பின் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்த பெண்!

2 ஆண்டுகள் கோமாவிலிருந்து மீண்ட பெண் தற்போது தன்னுடைய நிலைக்கு சகோதரர் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

பொதுவாக தாக்குதலின் போது ஒரு சிலர் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைமைக்கு செல்வது வழக்கம். அந்த கோமாவிலிருந்து மீண்டு வந்து அவர்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டுவது சற்று கடினமான ஒன்று. ஆனால் அதற்கு மாறாக பெண் ஒருவர் கோமா பாதிப்பிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டு வந்து தன்னை தாக்கிய நபரை அடையாளம் காட்டியுள்ளார். 

Continues below advertisement

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினியா மாகாணத்தைச் சேர்ந்தவர் வாண்டா பால்மர். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் காணமல் போனதாக காவல்துறைக்கு புகார் வந்துள்ளது. அதைத் தொடர்ந்து இவரை தேடிய காவலர்கள் இவர் மரணம் அடைந்து விட்டதாக நினைத்து உள்ளனர். 

இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காவல்துறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் தங்களுடைய காப்பகத்தில் வாண்டா பால்மர் என்ற நபர் இருப்பதாக தகவல் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த காப்பகம் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் வாண்டா பால்மர் கடுமையாக தாக்கப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக கோமாவில் இருந்தது தெரியவந்துள்ளது. 


அத்துடன் அவருக்கு மூளை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அவர் சுயநினைவை இழந்து கோமாவில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரால் பேசவே முடியாத நிலை இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதன்காரணமாக இரண்டு ஆண்டுகளாக அப்பெண் குறித்த தகவல்கள் எதுவும் தெரியாமல் இருந்துள்ளது. இந்தச் சூழலில் தற்போது நினைவு திரும்பிய அந்தப் பெண் மிகவும் கடினமான நிலையில் பேசியுள்ளார். அதில் அவரை இந்த நிலைமைக்கு உள்ளாக்கியது அவருடைய சகோதரர் என்று தெரிவித்துள்ளார். 

எனினும் அதன்பின்னர் இவரால் வேறு எதுவும் பேச முடியவில்லை. இதன்காரணமாக அவரிடம் என்ன நடந்தது என்று காவல்துறையினரால் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் அளித்த இந்த சிறிய வாக்குமூலத்தை வைத்து காவல்துறையினர் அவருடைய சகோதரரை தேடி வருகின்றனர். அவரை பிடித்து அவரிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் இந்த வழக்கில் பல உண்மைகள் வெளியே வரும் என்று கருதப்படுகிறது. சொந்த சகோதரியை சகோதரர் ஒருவர் பலமாக தாக்கி கோமா நிலைக்கு செல்ல வைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் மீண்டும் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola