பல்கெரியா (Bulgaria) நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா (Baba Vanga) இவருடைய பெயரை நாம் செய்திகளில் நாம் கடந்து வந்திருப்போம். இவரது இயற்பெயர் வாஞ்ச்சிலியா கஷ்டேரோவ். இவர் 12 வயதில் பேரிடர் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார். அப்போதிலிருந்து, தனக்கு கடவுள் எதிர்காலத்தை கணிக்கும் திறனை வழங்கியிருப்பதாக கூறிவந்தார். 1996 ஆண்டில் இவர் இறந்துவிட்டார். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன நடக்க இருக்கிறது என்பது குறித்து குறிப்பை விட்டுச்சென்றுள்ளார். இவர் சொல்வது போலவே உலகில் நடப்பதாக பலரும் கூறிவருகின்றனர். பாபா வாங்கா எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கணிப்பது அப்படியே நடக்கும் என்று பலரும் நம்பி வருகின்றனர். இந்நிலையில், பாபா வாங்கா 2022 ஆம் ஆண்டில் இவையெல்லாம் நடக்கப்போகிறது என்று சொன்னவற்றில் இரண்டு சம்பவங்கள் நடப்பதாக தெரிகிறது. இது பலரிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கு முன்பு 9/11 அமெரிக்காவில் நடந்த தீவிரவாத தாக்குதல், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியது.  இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியனின் பிரிவினை, 2004-ல் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட சுனாமி, செர்னோபில் சம்பபம், பாராக் ஒபாமா அமெரிக்க அதிபரானது உள்ளிட்டவைகள் பாபா வாங்கா கணித்ததுபோலவே நடைபெற்றது. இதுவரை அவருடைய கணிப்புகள் எல்லாம் சரியாகவே இருந்துள்ளது. இவர் சொல்லிவிட்டுச் சென்ற எதிர்கால குறிப்புகளை உலக அளவில் பலர் உற்று நோக்கி வருகின்றனர்.


பாபா வாங்கா 5079 ஆண்டுவரை எதிர்வரும் காலத்தில் என்ன நடக்கும் என்று கணித்து வைத்துள்ளார். 



பாபா வாங்காவின் 2022 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள்: 


இந்தாண்டு ஆசியா கண்டத்தைச் சேர்ந்த பல நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவில் பெரு வெள்ளம் ஏற்படும் என்று கணித்துள்ளார்.


ஆஸ்திரேலியாவில் உள்ள கிழக்கு கடற்கரை பகுதியில் மிக கனமழை பெய்யலாம் என்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், வறட்சி ஏற்படும் என்றும்.  உலகில் உள்ள சில நகரங்கள் தண்ணீர் தட்டுபாடு மற்றும் பஞ்சம் ஏற்படும் என்றும் கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஏற்கனவே போர்ச்சுக்கல் (Portugal) மற்றும் இத்தாலி (Italy) ஆகிய நாடுகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இத்தாலி நாட்டில் 1950 ஆம் ஆண்டில் இருந்து மோசமான வறட்சியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.


சைபீரியாவில்  கடுமையான நோய் தோற்று ஏற்படும். லெதல் என்ற புதிய வைரஸை ( lethal virus) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பார்கள்;  பருவநிலை மாறுபாடு, வெப்பநிலை மாற்றம் உள்ளிட்டவைகள் காரணமாக இந்தியாவில் பஞ்சம் ஏற்படும்; வேற்று கிரகவாசிகள் வருவார்கள்; பூமியின் சுற்றுப்பாதை மாறும்; வெட்டுக்கிளிகள் அதிகரிக்கும்; - இவை பாபா வாங்கா கணித்துள்ளவைகள். 


வரும் 2028 ஆம் ஆண்டு விண்வெளி வீரர்கள் வீன்ஸ்-க்கு பயணிப்பார்கள். 2046 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சை மூலம் மக்கள் 100 வயது வரை வாழ்வார்கள். 2100 ஆம் ஆண்டு இரவே இல்லாமல் போய்விடும்;  

இதெல்லாம் பாபா வாங்காவின் கணிப்புகள். இதெல்லாம் நடந்துவிடுமோ என்று பலருக்கும் அச்சம் எழுந்துள்ளது. 5079- இல் உலகம் அழியும் என்றும் அவர் கணித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.