கலிஃபோர்னியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் மிட்டாய் தயாரிப்பு நிறுவனமான மார்ஸின் ஸ்கிட்டில்ஸ்,அதன் புகழ்பெற்ற ஜெம்ஸ் மிட்டாய்களில் அதற்கு வண்ணங்களைக் கொடுக்க  ”நச்சுத்தன்மை" கலந்த ரசாயனங்களைப் பயன்படுத்தியதாகக் கூறி வழக்குத் தொடர்ந்தார். சான் லியாண்ட்ரோவில் வசிக்கும் ஜெனில் தேம்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஸ்கிட்டில்ஸ் மிட்டாய்கள் மனிதர்கள் நுகர்வதற்கு  ஆபத்தானது, ஏனெனில் அவற்றில் உயர்ந்த அளவில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளது என்று கூறினார். கலிபோர்னியாவின் வடக்கு மாவட்டத்திற்கான அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வியாழன் அன்று இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கையைக் கோரும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 2016ம் ஆண்டில் மிட்டாய் உற்பத்தியாளர் தனது தயாரிப்புகளில் டைட்டானியம் டை ஆக்சைடைப் பயன்படுத்துவதை நிறுத்தும் திட்டத்தை பகிரங்கமாக அறிவித்தாலும், இன்றும் ஸ்கிட்டில்ஸ் போன்ற பொருட்களில் டைட்டானியம் டை ஆக்சைடு உள்ளது என்று அதில் புகார் கூறப்பட்டுள்ளது.


மார்ஸ் இன்க். ஸ்கிட்டில்ஸில் காணப்படும் ஜெம்ஸ்களில் செயற்கை நிறமிகள் தரும் அறியப்பட்ட  டைட்டானியம் டை ஆக்சைடைப் பயன்படுத்துகிறது.






பெயிண்ட், பசைகள், பிளாஸ்டிக் மற்றும் கூரை பொருட்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் டைட்டானியம் டை ஆக்சைடு, டிஎன்ஏ, மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு தீங்கு விளைவிப்பதோடு, கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளையும் தூண்டும் என்று வழக்கு கூறுகிறது.


மே மாதம், ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையத்தின் உணவு சேர்க்கைகள் மற்றும் சுவைகள் பற்றிய நிபுணர் குழு, கூறியது: “கிடைக்கும் அனைத்து அறிவியல் ஆய்வுகள் மற்றும் தரவுகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ததில், டைட்டானியம் டை ஆக்சைடை இனி உணவாகப் பாதுகாப்பாகக் கருத முடியாது” என்று குழு முடிவு செய்தது. 


ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கலிபோர்னியா நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறியதற்காக புகார்தாரர் ஸ்கிட்டல்ஸ் நிறுவனத்திடமிருந்து குறிப்பிடப்படாத சில பண இழப்பீடுகளை அவர் கோரியுள்ளார்.


இதற்கு விளக்கமளித்துள்ள மார்ஸ்: "நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், டைட்டானியம் டை ஆக்சைடைப் பயன்படுத்துவது FDA விதிமுறைகளுக்கு உட்பட்டதுதான்." எனக் கூறியுள்ளது.


புகார்தாரரான தேம்ஸ், கடந்த ஏப்ரலில் வீட்டின் அருகிலுள்ள குயிக்ஸ்டாப்பில் இருந்து ஸ்கிட்டில்ஸை வாங்கியதாகவும், மிட்டாய்க்குள் என்ன இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தால் அவர் அவ்வாறு செய்திருக்க மாட்டார் என்றும் கூறினார்.