சட்டென மாறுது வானிலை என்பதற்கு ஏற்பவே இப்போது காலநிலையும் மாறி வருகிறது. வெயில், மழை, பனி என பருவக்காலங்களுக்கு ஏற்ப வானிலை மாறுவது வழக்கம். இந்த மாதமெல்லாம் கோடைக்காலம், இவையெல்லாம் மழைக்காலம் என நாம் மாதங்களை கணக்கிட்டு வைத்துள்ளோம். ஆனால் இப்போதெல்லாம் எப்போது மழை வருகிறது, எப்போது புயல் வருகிறது என்ற கணக்கெல்லாம் இல்லை. கோடை காலத்தில் புயல் உருவாகிறது. மழைக்காலத்தில் கடுமையான பனி பெய்கிறது. இந்த வானிலை மாற்றங்களுக்கு காரணமாக சொல்லப்படுவது புவியின் வெப்பம். வெப்பமயமாதலால் வானிலையில் இந்த மாற்றங்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.


புவியின் வெப்பமயமாதலால் வானிலை மாற்றம் ஏற்படுவது மட்டுமின்றி, பனிப்பாறை உருகுவது, கடல் மட்டம் உயருவது போன்ற பேரிடர்களும் உண்டாகத் தொடங்கியுள்ளன. சமீபத்தில் உலகளவில் நடந்த பல பேரழிவுகளே அதற்கு சாட்சி. ஒருபுறம் வெயில், மறுபுறம் கனமழை, வெள்ளம்,  காட்டுத்தீ என உலகமே பேரழிகளை சந்தித்து வருகிறது. 




இந்நிலையில் உலகளவில் நடந்த பேரழிவுகள் குறித்தும் அதனால் ஏற்பட்ட உயிர், பொருட்சேதங்கள் குறித்தும் புள்ளிவிவரங்களை தெரிவித்துள்ளது.  அதன்படி கடைசி 50 வருடங்களில் பேரழிவுகள் மூலம் உலகளவில் 20 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3.64 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவில் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது என்றும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.


இது குறித்து அறிவித்துள்ள உலக வானிலை அமைப்பு, ''1979 முதல் 2019 வரையிலான காலக்கட்டத்தில் கிட்டத்தட்ட 11ஆயிரம் பேரழிகள் உலகில் அதிக சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெரும் சேதமாக எத்தியோப்பியாவின் 1983 வறட்சி போன்ற பேரழிவுகள் அடக்கம். அந்த வறட்சியில்3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.  2005ல் காத்ரீனா புயலும் பெரிய பொருட்சேதத்தை உண்டாக்கியது. கிட்டத்தட்ட 163.61 பில்லியன் டாலர் சேதத்தை அது உண்டாக்கியது. 1970க்கு பிறகே அதிக பேரழிவுகள் உண்டாகின.  பல வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு பேரழிவை உண்டாக்கியது. உலக வெப்பமயமாதல் இந்த மாற்றங்களுக்கு பெரிய காரணமாக இருக்கிறது. இப்போது சரியான திட்டமிடல், முன் கணிப்பு போன்ற காரணத்தினால் உயிரிழப்புகள் அதிகளவில் குறைக்கப்படுகின்றன. 1970களில் 50ஆயிரமாக இருந்த உயிரிழப்புகள் 2010ல் 18ஆயிரமாக குறைந்துள்ளது. 2  மில்லியன் உயிரிழப்புகளில் 91% வளர்ந்துவரும் நாடுகளில் நடைபெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளது.




நாசா சமீபத்தில் ஆய்வின் முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 2030ம் ஆண்டில் கடலில் மிகப்பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கடலோர பகுதிகளை எச்சரித்துள்ளது. இதற்கு காரணம் நிலவின் தள்ளாட்டம் எனக் கூறுகிறது நாசா. காலநிலை மாற்றத்தால் கடல் நீர் மட்டம் உயர்கிறது. இதனால் ஏற்படும் புவியின் சுழற்சி, நிலவின் சுழற்சியில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த மாற்றத்தாலே பெரிய அலைகள் உண்டாகி வெள்ளம் ஏற்படலாம் என நாசா கூறுகிறது. இந்த ஆராய்ச்சியை நாசாவின் காலநிலை நெருக்கடியால் ஏற்படும் கடல் மட்டங்களை அதிகரிக்கும் சந்திர சுழற்சியின் பின்னர் வெள்ளத்தின் அதிகரிப்பு தொடங்கும் என்று ஆய்வு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.