அமெரிக்கர்களின் தினசரி வாழ்வில் இந்தியா முக்கிய அங்கம் வகிக்கிறது என, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


பிரதமர் மோடிக்கு விருந்து:


அமெரிக்க அரசின் அழைப்பின் பேரில் 3 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். அதன் ஒரு பகுதியாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. அதில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் உள்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.






”தினசரி வாழ்வில் அங்கம் வகிக்கும் இந்தியா”


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆண்டனி பிளிங்கன், என்ன சொல்வது அமெரிக்கர்களின் தினசரி வாழ்வில் இந்தியா அங்கம் வகித்துள்ளது. சமோசா சாப்பிட்டுக்கொண்டே ஜும்பா லஹிரி நாவல்களை படித்து மகிழ்கிறோம். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மிண்டி காலிங்கின் நகைச்சுவைகளுக்கு வாய்விட்டு சிரிக்கிறோம். தில்ஜித் அட் கோசெல்லா கான்செர்ட்டை கொண்டாடி மகிழ்ந்து உற்சாகமாக நடனமாடுகிறோம். பிரதமர் மோடி எனது தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன், ஓரளவிற்காவது நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம் என்றால் அதற்கு யோகா செய்வது தான் காரணம் ”என பேசினார். இதற்கு அங்கு கூடியிருந்த அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.






அமெரிக்காவில் பறந்த மோடி பேனர்:


அமெரிக்க சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். அதையொட்டி, மோடியை கவுரவிக்கும் விதமாக, பிரமாண்ட பேனர் ஒன்றை வானில் பறக்கவிட்டவாறு நியூயார்க் நகரில் விமானம் ஒன்று பறந்தது. அதில் அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்களுடன், அமெரிக்காவிற்கான வரலாற்று சிறப்புமிக்க பயணம் என எழுதப்பட்டு இருந்தது. இதுதொடர்பான வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


எகிப்து பயணம்:


இதனிடையே, 3 நாள் அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மோடி எகிப்து புறப்பட்டார். இரண்டு நாட்கள் அங்கு தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். குறிப்பாக, முதன்முறயாக எகிப்து பிரதமர் உடன் பிரதமர் மோடி வட்டமேசை ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.