சேரில் தலைகீழாக படுத்துக் கொண்டு அநாயசயமாக ஜக்ளிங் செய்யும் பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 48 விநாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.


அந்த வீடியோவில் சேரில் தலைகீழாக படுக்கும் பெண் காலை மேலே உயர்த்தி இரு பாதங்களிலும் இரண்டு பந்துகள் வைக்கிறார். பின்னர் 2 பந்துகளை வயிற்றுப் பகுதியில் வைக்கிறார். கையில் ஒரு பந்தை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் ஜக்ளிங் செய்ய ஆரம்பிக்கிறார். நம் கண்ணே நம்ப மறுக்கும் அளவுக்கு அவர் வேகமாக ஜக்ளிங் செய்கிறார். உண்மையிலேயே இந்த வீடியோ கண்களுக்கு விருந்தாக அமைகிறது.



ஸ்கில்ஃபுல் பால் ஜக்ளிங் என்று அந்தப் பெண்ணை பாராட்டிவருகின்றனர். அந்த வீடியோவின் கீழ் பலரும் பாசிடிவ் கருத்துகளை குவித்து வருகின்றனர். இதுதான் வாழ்க்கை என்று ஒருவர் தத்துவம் பேசியிருக்கிறார். 


ஜக்ளிங் என்பதை பொதுவாக கேளிக்கை விடுதிகளில், சர்க்கஸ் நிகழ்வுகளில் காணலாம். 


இந்த வீடியோவின் கீழ் ஒருவர், ஏதோ ஒரு விஷயத்தில் சிறந்து விளங்குவது என்பது தன்னிறைவு சார்ந்தது. அது எந்த மாதிரியான விஷயம் என்பதைப் பொறுத்து அமைவதில்லை. இதுபோன்ற அரிதான விஷயங்களை சிலர் செய்வது நம் அனைவருக்கும் மகிழ்வு தரும் விஷயமாகிவிடுகிறது. அதனால் இதனை ரசித்து மகிழ்ந்து போற்றுங்கள் என்று ஒரு பதிவர் பதிவிட்டுள்ளார்.


தமிழக சிறுவன் சாதனை


அண்மையில் தமிழகத்தை சேர்ந்த சிறுவன் ஒருவர் ஜக்ளிங்கில் சாதனை செய்தது நினைவு கூரத்தக்கது. வேவ் போர்டு ஓட்டியபடியே ஜக்ளிங் செய்து மாணவர் ஒருவர் செய்த சாதனையை 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அங்கீகரித்து உள்ளது. 


கோவை கேஎன்ஜி புதூர் பகுதியை சேர்ந்த பிரபல மேஜிக் கலைஞரான மகேந்திரன் கடந்த 15 ஆண்டுகளாக மேஜிக் நிகழ்ச்சிகளை, பல்வேறு மேடைகளில் செய்து வருகிறார். இவர் தனது மகனான சந்தோஷ்க்கு ஜக்ளிங் பயிற்சியை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜக்ளிங் கலையை கற்றுக்கொண்டு அதில் புதிய விதமாக இரண்டு வீல் கொண்ட வேவ் போர்டில், ஏறி அதனை ஓட்டிக்கொண்டே, மூன்று பந்துகளின் மூலமாக, ஜங்ளிங் செய்து படி, 25 கோன்களுக்கு இடையில், ஒரு நிமிடத்தில் 150 முறை, பந்துகளை பிடித்து, இந்திய புக் ஆஃப், ரெக்கார்டு என்ற  சாதனையை படைத்துள்ளார் சந்தோஷ்.


இன்னும் சில மாதங்களில் 4 பந்துகளை வைத்து கின்னஸ் சாதனை முயற்சி செய்ய உள்ளதகா சந்தோஷி தந்தை மகேந்திரன் தெரிவித்தார். சந்தோஷ் இந்த சாதனையை கடந்த ஆண்டு (2021) செய்தார்.