நேபாளத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காவ்ரேபலஞ்சோக் மாவட்டம். நேபாள நாட்டின் நேரப்படி இன்று மாலை மணிக்கு அங்குள்ள மத நிகழ்ச்சிக்காக நடனக்கலைஞர்களை ஏற்றிக்கொண்டு அந்த மாவட்டத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.


அந்த நாட்டு நேரப்படி, மாலை 6.30 மணியளவில் அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியது.





இந்த விபத்தில் இதுவரை 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.