இந்த உலகிலே மிகவும் உன்னதமான அன்பு தாயின் அன்பு. பல தருணங்களில் கருணையுடன் கூடிய அன்பு, சில சமயங்களில் கண்டிப்புடன் கூடிய அன்பாக வெளிப்படும். சமீபகாலமாக, மகன்கள் தங்களது தாய்களிடம் அடி வாங்குவது போன்றும், திட்டு வாங்குவது போன்றும் உள்ள வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.




இந்த நிலையில், அன்வர் ஜிபாவி என்ற நபர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில் விமான நிலையத்தில், அன்வர் ஜிபாவி விமான நிலையம் ஒன்றின் வாசலில் “ நாங்கள் உங்களை மிஸ் செய்கிறோம் அம்மா” என்ற வாசகத்தை ஆங்கிலத்தில் எழுதிய பதாகையுடனும், கையில் பலூனுடனும் ஆவலாக காத்திருக்கிறார்.


தனது தாய் வந்தவுடன் அந்த பதாகையையுடன் தனது தாயிடம் செல்கிறார். ஆனால், அவரது தாயோ விமான நிலையத்தில் இருந்து வந்த வேகத்தில் தான் காலில் அணிந்திருந்த செருப்பை கழட்டி, விமான நிலையம் என்றும்கூட பாராமல் தனது மகனை அடி, அடியென்று அடித்து துரத்துகிறார். அவரும் தாயிடம் செல்லமாக அடிவாங்கிக்கொண்டே விட்டால் போதும் என்று ஓடுகிறார். இதை அவரது நண்பர் படம்பிடித்துள்ளார்.




தற்போது, உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. “எனது அம்மா திரும்ப வந்துவிட்டார்” என்ற தலைப்பில் அவர் பதிவிட்ட இந்த வீடியோவை இதுவரை 132 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர். இந்த வீடியோவிற்கு 5.9 மில்லியன் நபர்கள் லைக் செய்துள்ளனர். 60 ஆயிரம் பேர் கமெண்ட் செய்துள்ளனர்.


இந்த வீடியோவை பதிவிட்ட அன்வர் ஜிபாவி பாலஸ்தீன- அமெரிக்கர் ஆவார். நடனக் கலைஞர், நடிகர் மற்றும் யூ டிபர் என்று பன்முகத்திறன் கொண்ட அன்வர் சமூக வலைதளங்களில் எப்போதும் செயல்பாட்டுடன் இருக்கக்கூடிய நபர். அவரது யூ டியூப் தொலைக்காட்சிக்கு 6.6 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் அவரை 8.1 மில்லியன் நபர்கள் பின்தொடர்கிறார்கள். அன்வர் ஜிபாவி தற்போது அமெரிக்காவின் சிகாகோ நகரில் வசித்து வருகிறார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண