உலகின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றான ஹார்வார்டு பல்கலைக்கழகம்,தொழிலாளர் சங்க மாணவர்களுக்கு சாதி காரணமாக வேற்றுமைக் காட்டுதலுக்கு தடை விதித்துள்ளது. இதன் மூலம், பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் 4,000க்கும் மேற்பட்ட இளநிலை மற்றும் முதுகலை தொழில் சங்க மாணவர்கள் பயனடைய உள்ளனர். 




 


இதன் மூலம், ஐவி லீக் குழுமத்தில் ஒன்றாக உள்ள சாதி பாகுபாட்டை அங்கீகரித்த முதல் பலகலைக்கழகமாக ஹார்வார்டு விளங்குகிறது. சாதி பாகுபாட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தி வரும்  சமூக குழுக்களுடன் இணைந்து நடத்திய போராட்டத்தின் பலனாய் இந்த வெற்றி கிடைத்துள்ளதாக ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் EQUALITY LABS தெரிவித்துள்ளது. சாதி அடிப்படையிலான பாகுபாட்டில் இருந்து மாணவ சமூகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் பாதுக்காக்கு மிகப்பெரிய முயற்சிக்கு இது வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. மாணவர்கள்  தொழில் சங்கம் மற்றும் ஹார்வார்டு பல்கலைகழகத்துக்கு இடையே நான்கு ஆண்டு ஊழியர் ஒப்பந்தம் கையெழுத்தானது.       


இந்த ஒப்பந்தத்தில், சாதி அடிப்படையிலான பாகுபாட்டை  பாதுகாக்கப்பட்ட பட்டியலில் (Protection Category) சேர்க்கும் பிரிவும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், சமயம், இனம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைத் தாண்டி சாதி அடிப்படையிலான வேற்றுமைக் காட்டுவதும் தடை செய்யப்படுகிறது. 


மார்க்சீய கோட்பாட்டின் படி, உழைப்பாளியை மிகக் கொடூரமாக அந்நியப்படுத்தும் ஒரு வடிவமாக சாதியம் உள்ளது.சாதியம் உழைப்பாளியைக் கடுமையாகச் சுரண்டுவதோடு, இழிவு படுத்துகிறது. ஒட்டுமொத்த மானுட ஆளுமையை அது சிதைக்கிறது. மேலும், சாதி பாகுபாட்டில் பெண்களின் ஆளுமைத் திறன் மொத்தமாக சிதைக்கப்படுவதாக ஹவார்டு மாணவ சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.   


Equality Labs ஆய்வு மையத்தின் நிர்வாக இயக்குனர் தேன்மொழி சவுந்தராஜன், " இந்த வெற்றியை சாத்தியமாக்க உதவிய ஹார்வர்டு மாணவ சமூகத்தினரின் மகத்தானதைரியம் ஊக்கமளிக்கிறது. இதுபோன்ற மாணவ தொழிலாளர்கள் மூலம்  தான் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும். இந்த துணிச்சலான நடவடிக்கையை எடுத்த ஹார்வர்ட் பட்டதாரி மாணவர் சங்கத்திற்கு நன்றி.  சாதி சமத்துவம் என்பது மாணவர்களின் சமன்மைக்கான உரிமை (Equality of Rights)"என்று தெரிவித்தார்.    


பிரௌன் பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் போன்ற ஐவி லீக் குழுமத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் படிக்கும் போதே பல்கலைக்கழகங்களில் பணி புரிவது.  இம்மாணவர்களின் சம்பளம், கூடுதல் பணிநேரக் கூலி, மருத்துவச்செலவுகள், ஓய்வுக்கால ஆதரவு போன்றவற்றை நிலைநாட்துவதில் மாணவ தொழிலர் சங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. 


source