தாகத்தால் தவிக்கும் விஷம் கொண்ட பாம்பு ஒன்றிற்கு தண்ணீர் ஊட்டும் மனிதனின் வீடியோ வைரலாகி வருகிறது. 


விலங்கோடு வாழும் மனிதர்கள்


மனிதநேயமும் மற்றும் பொறுமையும் உலகில் வாழும் மனிதர்களுக்கு மிகவும் அவசியமான இரண்டு குணங்கள். சக உயிர்களிடத்தில் மனிதன் அன்பு காட்ட வேண்டிய இடத்திற்கு வளர்ந்துள்ளான். நாம் அவற்றின் இருப்பை மதிக்கவில்லை என்றால் அது அவர்கள் வாழ்வாதாரத்தையே பாதிக்கும் வகையில் மனிதர்கள் இந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்துகின்றோம். அவற்றை அரவணைத்து செல்வது நாம் அவற்றுக்கு செய்யும் பிராயச்சித்தம். விலங்குகளை மனிதர்கள் பாதுகாப்பது போன்ற பல செய்திகளை நாம் கேட்டிருப்போம். தற்போது வைரலாகி வரும் வீடியோவும் அதைதான் சொல்கிறது. ஒரு விஷம் கொண்ட பாம்பிற்கு தண்ணீர் ஊட்டும் மனிதனின் வீடியோ வைரலாகி வருகிறது. 






வைரல் விடியோ


வைரலான வீடியோ, விஷப்பாம்புக்கு தண்ணீர் கொடுப்பதற்காக ஒரு மனிதன் பிளாஸ்டிக் பாட்டிலை மெதுவாகக் சாய்ப்பதைக் காட்டுகிறது. தாகத்துடன் இருக்கும் அந்த பாம்பு அமைதியான முறையில் தண்ணீரை உறிஞ்சுவதையும் காணலாம். உலக மக்களுக்கான மிகப்பெரிய கருத்தை சுமந்துள்ள இந்த மனதைக் கவரும் வீடியோ ஆன்லைனில் பலரின் இதயங்களைத் தொட்டு வருகிறது.


தொடர்புடைய செய்திகள்: watch video: ”பறக்க பறக்க துடிக்குதே..!“ தன்னை மறந்து நடனமாடிய Zomato ஊழியரின் வைரல் வீடியோ !


காட்டில் எடுக்கப்பட்ட விடியோ


இந்த வீடியோ ஒரு காட்டில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது, ஆனால் எங்கு, எந்த காடு என்ற விவரங்களும், அந்த மனிதர் யார் என்ற விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. ஒரு மனிதர் ஒரு நாகப்பாம்பின் முன் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொண்டு அதன் தாகத்தைத் தணிக்க உதவுகிறார். அவர் பாட்டிலைச் சற்று சாய்த்து, பாம்பு எளிதில் குடிக்கும் வகையில் அதன் வாய்க்கு அருகில் வைக்கிறார்.



கமெண்ட்ஸ்


வீடியோ ஒரு அழகான மெஸேஜை உலக மக்களுக்கு சொல்கிறது. அது பகிரப்பட்டதிலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்-களை சேகரித்துள்ளது. இந்த அழகான விஷயம் குறித்து நெட்டிசன்கள் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். "நான் பாம்பு தண்ணிர் குடிப்பதை பார்ப்பது இதுவே முதல் முறை...பாம்புகளால் குடிக்க முடியாது என்று கேள்விப்பட்டேன். இதைப் பகிர்ந்ததற்கு நன்றி... நீங்கள் ஒரு நிபுணராக இல்லாவிட்டால், இதனைப் பின்பற்றி செய்வது ஆபத்தானது" என்று சிலர் குறிப்பிட்டுள்ளனர். "மிகவும் அழகாக இருக்கிறது," என்று ஒரு பயனர் கூறுகிறார். "மிகவும் மனிதாபிமானம் உடையவர்," என்று மற்றொருவர் கருத்து தெரிவிக்கிறார். "ஆஹா... நன்றாக உள்ளது," என்று ஒருவர் பதிவிட்டார். "கடவுள் இந்த உன்னத மனிதரை ஆசீர்வதிப்பாராக" என்று ஒருவர் எழுதுகிறார்.