உலக அளவில் ஐபோன்(iPhone) பிராண்டிற்கு ஒரு தனி இடம் உண்டு. ஐபோன் நிறுவனம் தங்கள் பொருளின் தரத்தில் எப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை. சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரிபாகங்கள் என அனைத்திலும் தனித்தன்மையுடன் கூடிய தரத்தை பயனர்களுக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் இராணுவ வீரர் உயிரை ஐபோன் காப்பாற்றியதாக இரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


வீடியோவில், உக்ரைன் இராணுவ வீரர் ஒருவர் தனது பையில் (backpack) இருந்து ஐபோன் ஒன்றை எடுக்கிறார். அதில் குண்டு பாய்ந்திருக்கிறது நன்றாக தெரிகிறது. அந்த வீடியோவில், “ ஸ்மார்ட்ஃபோன் என் உயிரைக் காப்பாற்றிவிட்டது.” என்று அவர் சொல்லியிருக்கிறார்.






அதாவது, இராணுவ வீரரை நோக்கி வந்த துப்பாக்கி குண்டு, அவரை தாக்காமல், நல்லவேளையாக ஐபோன் மீது விழுந்துவிட்டது. இதனால், ஐபோன் மட்டும் பாதிப்படைந்துள்ளது. அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. 


இந்த வீடியோவை பலரும் நெகிழ்ச்சியும் பாராட்டுகளுடன் பகிந்து வருகின்றனர். 


உக்ரைன் நாட்டை ஆக்கிரமிக்க ரஷ்யா போர் தொடங்கி 100 நாட்களுக்கும் மேலாக தொடர்கிறது. அதன் பாதிப்புகளில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை. இதில் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 








இந்த வீடியோவை உக்ரைன் நாட்டின் உள்துறை அமைச்சகத்திற்கு ஆலோசனை வழங்குபவரும் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 


இதோபோல, கடந்த ஏப்ரல் மாதத்தில் ரஷ்யாவின் தாக்குதலின்போது உன்ரைன் வீரர் ஒருவர் ஐபோன் துப்பாக்கிக் குண்டை தாங்கியதால் தாக்குதலில் இருந்து தப்பி உயிர் பிழைத்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண