பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து கொண்டு வருகிறது. வழக்கமாக அங்கு 21-30 டிகிரி வெயில் இருக்கும். ஆனால் இம்முறை கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பிரிட்டன் நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்நிலையில் கோடை கால வெயிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சூழலில் சினிமா தியேட்டர் நிறுவனம் ஒன்று ஒரு வித்தியாசமான சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஷோகேஸ் சினிமா நிறுவனம் கோடை வெயிலிலிருந்து மக்கள் தப்பிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 


அந்த அறிவிப்பின்படி இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாட்களுக்கு திரையரங்கிற்கு வரும் நபர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் இலவசம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தியேட்டருக்குள் வரும் நபர்களுக்கு சிவப்பு முடி இருந்தால் மட்டுமே இந்த இலவச கட்டணம் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நபர்களுக்கு சினிமா தியேட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 




இது தொடர்பாக ஷோகேஸ் தியேட்டரின் பொது மேலாளர், “பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஆகவே இந்த வெயிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வகையில் நாங்கள் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். அதன்படி எங்கள் திரையரங்கிற்கு வரும் மக்களில் சிவப்பு முடி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கட்டணம் இலவசம். இந்தச் சலுகை  வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு மட்டும் அமலில் இருக்கும். இந்தச் சலுகையை பயன்படுத்தி அவர்கள் குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்கில் படம் பார்த்து ரசிக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.


பிரிட்டனில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கோடை வெயிலின் வெப்பம் 40 டிகிரியை தாண்டும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மக்கள் அனைவரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் சினிமா தியேட்டரின் இந்தப் புதிய அறிவிப்பு மிகவும் வைரலாகி வருகிறது. எனினும் இந்த முடியின் நிறம் தொடர்பான அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண