Watch Video: ஆஸ்திரேலிய குடும்பத்தினர் இறந்த தங்கள் செல்ல பிராணியான நாயை கம்பளமாக பாதுகாத்து வந்ததற்கான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


வளர்ப்பு நாய்கள் நன்றியுள்ள ஜீவன்களாக பார்க்கப்படுகிறது. ஆனால் கோபத்தில் யாரையாவது திட்டும்போது ’போடா நாயே'...என்று சொல்வது பலரது வாடிக்கையாக உள்ளது. இன்றளவும் கூட பணக்காரர்கள் வீட்டு ஏசி அறையிலும், ஏழை வீட்டு கொட்டையிலும் செல்லப் பிராணிகள் வீட்டில் ஒரு உறுப்பினராக நாய்கள் இருந்து வருகிறது.  அவர்கள் குடும்பத்தில் ஒருவராகவே நாய்களை பார்க்கின்றனர். செல்லப்பிராணிகளுக்கும் அவற்றின் உரிமையாளர்களுக்கும் இடையிலான பிணைப்பு உண்மையில் விலைமதிப்பற்றது. அவர்கள் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் பாசம் அளவு கடந்தது. அவர்கள் சாப்பிட்ட உணவு உட்பட அனைத்தும் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பகிர்வர். வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்காக ஒரு பெயரை வைத்து அன்போடு அழைப்பது அழகானதாக இருக்கும். 


இந்நிலையில், ஆஸ்திரேலிய குடும்பம் இறந்த தங்கள் செல்ல நாயின் நினைவைப் பாதுகாக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான விஷயத்தை செய்ததுள்ளனர். இறந்த நாயின் உரோமத்திலிருந்து பிரத்யேகமாக ஒரு கம்பளத்தை உருவாக்கினர்.  இதை டாக்ஸிடெர்மி செயல்முறை என்று கூறப்படுகிறது.  இறந்த விலங்குகளை உயிரைப் போன்ற முறையில் பாதுகாத்தல் அதன் அசல் வடிவத்தில் ஒரு உயிரினத்தைப் பாதுகாப்பதை உள்ளடக்கியது என்று கூறப்படுகிறது.  குறிப்பாக இதுபோன்று மக்கள் தங்கள் செல்லப்பிராணிகளின் நினைவாக செய்வதைப் பார்ப்பது மிகவும் அசாதாரணமானது. இந்த வீடியோவில் நாயின் தலை மற்றும் பாதங்கள் அப்படியே கிட்டத்தட்ட உயிருடன் இருப்பது போன்றே காணப்படுகிறது.






மேலும் இது குறிப்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்தனர். இணையத்தில் இந்த வீடியோவை பார்ப்பவர்கள் மத்தியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த வீடியோ பதிவு மீது மிகவும் வெறுப்படைந்தாலும்,  தங்கள் செல்லப்பிராணிகள் மீது வைக்கும் பாசத்தின் வெளிப்படையானது போன்றே இதை மற்றவர்கள் பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளது.




மேலும் படிக்க


85 நகரங்களில் 100 சதவீத வீட்டு குடிநீர் இணைப்பு - ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் பாராட்டு!


Gujarat Election 2022 Date : இந்த தேதிகளில் குஜராத் தேர்தல்.. இரண்டு கட்ட வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை தேதி: முழு விவரம்..