அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் துணை அதிபர் கமலா ஹாரிஸையும் மரண கலாய் கலாய்த்து ஸ்பூஃப் வீடியோ வெளியிட்டுள்ளது சவுதி தொலைக்காட்சி.


சவுதி அரேபியாவின் ஸ்டூடியோ 22 ஷோ அனைவரது கவனத்தையும் ஈர்க்கக் காரணம் கலாய்க்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்.


இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி எங்கோ போய்விட்டதாம். இதனை மிடில் ஈஸ்ட் பிராட்காஸ்டிங் மையம் மற்றும் காலீத் அல் ஃபராஜ் நிறுவனங்கள் இணைந்து ஒளிபரப்பியுள்ளது.


உக்ரைன், ரஷ்யா போர் உலகையே உலுக்கி வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்கா அதை கையாளும் விதத்தை நையாண்டி செய்வது போல் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைந்துள்ளது.


அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் கோ பைடன் போல் ஒருவர் வேடமிட்டிருக்கிறார். இன்னொரு ஆண், கமலா ஹாரிஸ் போல் வேடமிட்டிருக்கிறார். ஸ்கிட்டின் ஸ்க்ரீன்ப்ளே படி பைடன் அமெரிக்க ஊடகத்தை சந்திக்கிறார். 
உள்ளே நுழையும் அவர் பத்திரிகையாளர்களைப் பார்த்து கையசைத்துவிட்டு, தம்ப்ஸ் அப் செய்துவிட்டு அப்படியே நடையைக் கட்டப்பார்க்கிறார். பதறிப்போகும் கமலா ஹாரிஸ் அவரை தடுத்து நிறுத்தி மீண்டும் இருக்கைக்கு அழைத்து வருகிறார்.



எந்த நாட்டுப் பிரச்சனையைப் பற்றிப் பேசப்போகிறோம் என்பதையே மறந்துவிட்டு, நாம் இன்று ஸ்பெயின் பற்றி பேசவுள்ளோம் என உளறுகிறார். உடனே கமலா ஹாரிஸ் திருத்துகிறார் அப்போதும் தவறாக ஆப்ரிக்கா எனக் கூற மீண்டும் காதுக்குள் கமலா சரியான ஊரைச் சொல்ல ரஷ்யா எனக் கூறுகிறார் பைடன்.


இன்று நான் ரஷ்ய அதிபருக்கு என்று ஆரம்பிக்கும் பைடன் பெயரை மறந்துவிட்டு கமலாவிடம் கேட்க அவர் புதின் என எடுத்துக் கொடுக்கிறார். புதின் இன்று உங்களுக்கு அமெரிக்கா ஒன்றை சொல்ல விரும்புகிறது. அது என்னவென்றால் என ஆரம்பிப்பவர் தூங்கி வழிகிறார். நகைப்புடன் எழுப்புகிறார் கமலா ஹாரிஸ். தூக்கத்தில் இருந்து எழுந்துகொள்ளும் அதிபர் பைடன், சீன அதிபர் என ஆரம்பிக்கிறார். மீண்டும் கமலா ஹாரிஸ் அவர் காதருகே சென்று ரஷ்ய அதிபர் எனக் கூறுகிறார். உடனே பைடன் ஓ இன்னும் அது முடியவில்லை. என்னைத் திருத்தியதற்கு நன்றி ஃபர்ஸ்ட் லேடி எனக் கூறுகிறார்.


பதறிப்போன கமலா, காட்டமாக ஏதோ சொல்கிறார். (ஃபர்ஸ்ட் லேடி என்பது அதிபரின் மனைவி) உடனே அதிபர் பைடன் நன்றி சொல்லி. இறைவன் ஆசிர்வதிப்பார் எனக் கூறி உறங்கிவிடுகிறார். அதுவும் குறட்டைவிட்டு. அவரைத் தாங்கிப்பிடிக்கும் கமலா ஹாரிஸ் நன்றி, ஹலேலூயா, அதிபருக்கு கைத் தட்டுங்கள் எனக் கூறுகிறார்.


இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.