இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காஃபி கடை ஒன்றில் பாகிஸ்தான் அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் இடை மறித்து தடுத்தி நிறுத்தியுள்ளனர்.






பின்னர், அவரை பின் தொடர்ந்து சென்று, திருடி, திருடி என அவரை நோக்கி கோஷம் எழுப்பியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


"பாகிஸ்தானில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்துடன் அவர் லண்டனில் சுற்றித் திரிவதைப் பாருங்கள்" என இம்ரான் கான் ஆதரவாளர்கள், அவரை பின்தொடர்ந்து சென்று கத்துவதை வீடியோவில் காணலாம். 


போன்களை வைத்து கொண்டு அவரை நோக்கி எதிர்ப்பாளர்கள் கத்துவதும் அவர் அமைதியாக இருப்பதையும் வீடியோவில் பார்க்கலாம். வெளியான ஒரு வீடியோவில், அமைச்சரை நோக்கி ஒரு பெண், "அவர் அடக்கமற்றவர்" என கூறுவதும் பதிவாகியுள்ளது. 


ஊடகவியலாளர் இஹ்திஷாம் உல் ஹக் வெளியிட்ட வீடியோவில், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் முக்கிய தலைவரான மரியமை நோக்கி இம்ரான் கான் ஆதரவாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதையும் அவர் அதற்கு பொறுமையாக பதிலளிப்பதையும் காணலாம்.


கேள்வி எழுப்பியவர்களுக்கு விரிவாக பதில் அளித்த மரியம், "உங்களுக்கு ஒரு சகோதரியும் ஒரு தாயும் இருந்திருக்க ண்டும். நீங்கள் என்னைத் துன்புறுத்துவது போல் யாராவது அவர்களைத் தெருக்களில் விரட்டினால், என்ன மாதிரியான செய்தியை நீங்கள் சொல்ல வருகிறீர்கள்?


 






இப்போதுதான், பிடிஐ (இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) கட்சிச் சேர்ந்த 20 பேர் மைக்குகளுடன் இங்கு வந்தனர். அவர்கள் என்னை கேவலப்படுத்தினர். பல பெயர்களை வைத்து அழைத்தனர். 


ஆனால், நான் அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. அது என்னைத் தொந்தரவு செய்யவில்லை. நான் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நடந்து கொள்வதன் மூலம் மட்டுமே உயர்கிறேன். உங்கள் குரல் மற்றும் வாக்கு மூலம் மட்டுமே கருத்துகளை வெளியிட முடியும்" என்றார்.