இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை உள்ளடக்கிய G20 நாடுகளின் மாநாடு ரோம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து மற்ற உலகத் தலைவர்களுடன் ரோமின் பிரபல ட்ரேவி நீருற்றுக்குச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி. 


இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டின் போது அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார். 






இந்நிலையில் ட்ரேவி நீருற்று இத்தாலியில் பிரபலமான சுற்றுலாத்தலமாக இருக்கிறது. பின்னால் திரும்பியவாறே தோள்களுக்கு பின்னே நீரூற்றில் நாணயத்தை வீசினால் மீண்டும் ரோமிற்கு திரும்ப வருவார்கள் என்பது நம்பிக்கை. இதையடுத்து பிரதமர் மோடி, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் பின்னோக்கி நின்றவாறு நீரூற்றினுள் நாணயங்களை வீசினர். 






காயினை வீசினால் மீண்டும் ரோமிற்கு திரும்ப வருவார்கள் என நம்பிக்கை சொல்கிறது. ஆனால் கோவிட் 19-க்கு முந்தைய சூழலுக்கு உலகமே திரும்ப வேண்டும் என்பதுதான் என் மனதில் ஓடிக்கொண்டிருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் ட்வீட் செய்துள்ளார். 






இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துகொள்ளவில்லை.